என் அலுவலகத்தோழி

உரிமையாய் உறவாட
என்னுள் உதித்த
உன்னத உறவு
என் தோழி

அது ஒரு காலம்
அன்பிற்காய் ஏங்கிய காலம்...
அன்று எனக்காய் பிரம்மன் அனுப்பிய அலுவலக தேவதை அவள்....

என்னை விட முன்று வயது மூப்பவள்...
அக்கா என நான் அழைத்ததும் இல்லை
அவளும் அதை எதிர்பார்க்கவில்லை

எனக்காய் மதியம் உணவுக்கட்டி வருபவளும் அவளே

எனக்கான வேலைகளை அலுவலகத்தில் ஓவர் டைம் செய்பவளும் அவளே

இரவில் வீடுவரை துணைக்கு அழைத்தவளும் அவளே

சோகத்தில் நான் தத்தளித்தால் படகாய் கரை சேர்பவளும் ஆவளே

தவறேனும் நான் செய்தால் பேசாது தண்டனையை தந்தவளும் அவளே

பஞ்சும் நெருப்பும் பக்கத்தில் இருந்தால் பற்றாதா...? அலுவலகத்தில் அனைவரின் பேச்சும்....

உண்மையில் எங்கள் உறவில் நான் மரக்குச்சி மட்டுமே....அவள்தான் நெருப்புக் கதிராய் ஒளிரச் செய்தாள்.....

அவள் யாரென என் மனைவி
அன்று கேட்டாள் தோழி என சொல்ல் மனம் வருவே இல்லை.
எனக்காய் இறைவன் அனுப்பிய ஆசிரியை என்றே சொன்னேன்.
அவள் எப்படி சொல்லிருப்பாள்?

எழுதியவர் : நவின் (23-Sep-15, 6:42 pm)
பார்வை : 1588

மேலே