உன் நிழல் தேடி

நெடுஞ்சாலையின் இருபுறமும் இரைச்சலுடன் செல்லும் வாகனங்கள் நடுவே...
நான் மட்டும்
நிசப்த்தமாய் !

அள்ளி எடுக்க
ஆள் இல்லாமல்..
சிதறிய உடலை
சீரமைக்க மனமில்லாமல்..

பார்வையில் மட்டுமே
பரிதாபத்தை பரிசளித்து..
எனை பிணம் என்று சொல்லி விலகிப்போகும் நடைபிணங்கள் !

என்னை மறந்துபோ
இல்லையேல் மரித்துப்போ..
என் கண்முன் நிற்காதே மறைந்துபோ ! - என நீ எய்த விஷ அம்புகள் என் மார்பினில் பாய்ந்த மறுகணம் !

நீர் அற்ற நிலம் போல்...
ஆங்காங்கே பற்பல விரிசல்கல் என்னுள் ஏற்பட - பட்ட மரமாய்..
பசுமை இழந்து வாழ்ந்துவந்தேன் !

இன்று !!!
என் உடலை விட்டு உயிர் பிரிந்தாலும் ...
உன் நின்னினைவுகள் மட்டும்
பிரிய மறுக்கின்றது!!!

ஆதலால் தான்
இந்த நிம்டம் வரையிலும்
என் ஆன்மா !!! - உன் நிழல் தேடி அலைகின்றது..!!!

எழுதியவர் : கிருத்திகா ரங்கநாதன் (25-Sep-15, 10:24 am)
Tanglish : un nizhal thedi
பார்வை : 1039

மேலே