காதலால்விட்ட கண்ணீர்தானடி 555

என்னவளே...

நீயும் நானும் கடற்கரையில்
நடைபோட்டபோது...

கடல் நீர் ஏன் கரிக்கிறது என்றாய்
தெரியவில்லை என்றேனடி...

இன்று என் காதலைவிட்டு
செல்கிறாய்...

என் காதலை அனாதையாக
விட்டு செல்லும் பாவம்
உனக்கு வேண்டாம்...

உன் விழிகளை நான்
கடன் கேட்கிறேனடி...

கொடுத்துசெல் அந்த
வின்மீனிடம்...

இன்று என் கண்ணீர்த்துளி
கடலில் கலந்ததடி...

காதலால்விட்ட
கண்ணீர்தானடி கடல் நீர்...

மனித உப்பு கரிக்கிறதடி.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (25-Sep-15, 4:13 pm)
பார்வை : 509

மேலே