இதய குழந்தை

என்று உன் விழிபார்வையை
என் மீது வீசினாயோ
அன்றே வீழ்ந்து விட்டேன்

ஒழுங்காக இருந்த
என் உடலும் உயிரும்
உன் உதட்டோரம்
உதித்த புன்னகையில்
ஒட்டுமொத்தமாய்
ஒடுங்கிவிட்டது

இயல்பாய் இயங்கிய
என் இதயமும்
உன் நினைவுகளால்
சீரழிக்கபட்டு விட்டது

உன் நினைவுகளால் கற்பழிக்கபட்ட என் இதயம்
கருத்தறித்து விட்டது

ஓர் இதயம் அதுவும்
ஆணீன் இதயம்
கருத்தறித்த செய்தியை
விஞ்ஞானமும் மெய்ஞானமும் இந்த
வரிகளை வாசித்து
தெரிந்து கொள்ளட்டும்

என் இதயம் சீரழிந்த
செய்தியை கூறுகிறேன்

அவள் என்னை
தொட்டு அணைக்கவில்லை
தூரம் இருந்தே
அணைத்து விட்டாள்

அவள் விரல்கள்
கூட படவில்லை
விழிகளால் விழுங்கிவிட்டாள்

அவள் நிழல் கூட
நெருங்கவில்லை
நினைவுகளால் நெருங்கிவிட்டாள்

சத்தமிட வாய்பே இல்லை
காரணம் சம்பவம் நடந்த
ஞாபகமே இல்லை

பிரசவ செய்தியை
பின் சொல்கிறேன்
மரணச்செய்தியை
முன் சொல்கிறேன்

உன் உறவை
உபயோகப்படுத்தி (இல்லை)
உதாரணப்படுத்தி
என்று என்னை
உதாசின படுத்தினாயோ அன்றே
இறந்து விட்டது
என் இதயம்

இதயம் இறந்தும்
ஒரு இனிய செய்தி
அது சுமக்கும் குழந்தை
இறக்கவில்லை

உயிரற்ற உடலில்
உயிருடன் வளர்ந்து
மாதங்கள் சில கழிந்தது
ஒரு ஜீவன் மண்ணிற்க்கு
வரப்போகிறது
விஞ்ஞானத்தின்
விழிகள் பிதுங்கபோகிறது

காரணங்களே இல்லாத
சில காரணங்களை காட்டி
என் காதலை புறம்தள்ளி
வாழ்க்கைக்கு வைத்துவிட்டாய் முற்றுபுள்ளி
இந்த
முற்றுப்புள்ளிக்கு
முடிவுகட்ட தான்
பிறக்கிறது நம்
முதல் இதயகுழந்தை

மனிதயினம் இதுவரை
கண்டிராத பிரசவம்
இந்த இதயபிரசவம்

காத்திரு காதலி
நம் இதயகுழந்தையின்
இம்சைகளை எதிர்கொள்ள

எழுதியவர் : வேலு வேலு (25-Sep-15, 4:30 pm)
Tanglish : ithaya kuzhanthai
பார்வை : 244

மேலே