ஏழாவது மனிதன்5
பொருள் தேடும்,
கோபத்தில்
சொட்டும் விழிகளின்
கத்தும் குருதி...
சிவப்பு சிந்தையில்,
நிறமற்ற கொப்புளக்
கூழாங்கல் தீவிரம்
ஆற்றின் புரட்சி...
மற்றவையும் மாற்றத்துக்கே,
மகரந்தமின்றி
மானுடம் ஏது என்ற
மகப்பேறு விந்தை...
கற்றவை கொள்,
பட்டும் படாத
முற்றுகை நீரோசை
யுத்த சகதியின் நீட்சி...
காட்சிகள் பிழை,
என்றாலும் கலைகளின்
தாகம் தீயெனச்
சிரிக்கும் ஆறாம் விரல்...
மாறுபடுதலின் மகத்துவம்,
மையம் குறி நோக்கி
சுழலுவது உறுத்தல்
அல்ல- உணர்த்தல்.......
எழுதித் தீர்பவன்
படைத்து சோர்பவன்
மீண்டும் விழ,
மீண்டும் ஏழ - யாரென்ற அவன்
ஏழாவது மனிதன்...
கவிஜி