இது ஒரு புதிய காதல்

கல்லூரியில் கண்டதும்
கண்ணும் கண்ணும் கலந்ததும்
அது காதலாய் அலர்ந்ததும்
ஒரு நன்னாளில் எங்கள்
மண நாளாய் வந்தமைய
காதலர்கள் நாங்கள்
கணவன்- மனைவி என்ற
உறவில் பின்னப்பட்டோம்

காலமெனும் சக்கரம் வேகமாய்
நகர்ந்தது எங்கள் காதல் பிணைப்பில்
மக்களிருவர் உருவாயினர் ,நாங்களும்
பெற்றோராய் மாறினோம்
நலமான குடும்பத்தை நடாத்தி வந்தோம்


அரசாங்க ஊழியன் நான் ஒரு விஞானி
வேலையில் இடம் மாற்றம் செய்யப்பட்டேன்
புதிய இடத்தில ஒரு பெண் ஊழியை
என் கீழே பணி செய்ய வந்து அமைந்தாள்
நாட்கள் செல்ல செல்ல எங்கள் இடையில்
நட்பொன்று மெல்ல மெல்ல உருவாயிற்று
பணிமீதான பரஸ்பர பேச்சு வார்த்தை
அதையும் மீறி ஒரு நட்பை எங்களுள்
உருவாக்கியது இது காதல் அல்ல
இரு நண்பர்கள் இடையில் மலர்ந்த நட்பு
ஆனால் இதில் நண்பர்கள் இருவரும்
பாலால் வேறானவர்கள் ; இந்த நட்பை
இந்த உலகம் காமாலைக் கண்ணால்
மட்டுமே பார்க்கும், பார்க்கையிலே

விரைவில் எண்களின் இந்த புதிய நட்பு
என் இல்லத்தை சென்று என் மனையாளை
மெல்ல தட்டி எழுப்பியது நண்பர்கள் மூலமாய்
எங்கள் எதார்த்த நட்பு விகாரமாய் காதலாய்
திரிக்கப்பட்டு என் மனைவி என் இடையே
எங்கள் உறவில் ஒரு விரிசலை உண்டாக்க
அதை சூட்சுமமாய் தெரிந்துகொண்ட -என்
அலுவலக நண்பி எனக்கும் தெரியாமல்
ஆனால் எங்கள் பணி நிமித்த வேலைகளில்
வில்லங்கம் கொணராமல் இனிதே பூர்த்தி செய்தப்பின்
அலுவலக மாற்றம் கோரி விண்ணப்பித்து ஒரு நாள்
புன்னகையுடனேயே என்னை விட்டு பிரிந்தாள்
ஆம் இடையே பூத்த அந்த நட்பு வாழ்கையில் ஒரு
வெளிச்சம் தந்தே மறைந்தது -ஆம்
கணவன் மனைவி என்ற ஒருவிற்கு இடையில்
ஒரு நட்பு வளருமாயின் அது எத்துனை புனிதமாயினும்
இந்த உலகம் அதை எப்போதும் ஏற்காது ,எந்த பெண்ணும்
தன கணவன் வேறு ஒருத்தியுடன் நெருக்கமாய் பழகுவதை
ஏற்கபோவதில்லை ,எனவே நண்பர்களே
இத்தகை நட்பு தேவை இல்லை

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-vasudevan (28-Sep-15, 10:47 am)
பார்வை : 90

மேலே