இயற்கையை நேசிப்போம் !!!
நிழலுக்கு
நீண்ட வரிசை வரலாம்
ஆக்சிஜனுக்கு
அடிதடி வரலாம் !!!
சூரியன் தன்
சுடும் ஒளியால்
நிலவை உருக்கலாம்
இரவே இல்லாமல் போகலாம் !!!
தங்கத்தையும் விஞ்சி
தண்ணீர் விலை போகலாம் !!!
மழைக்காக மனிதன்
மண்டியிட்டு ஒப்பாரி வைக்கலாம் !!!
உணவில்லாமல் உணர்விழந்து
பாம்பைப் பாம்பு விழுங்குவது போல்
மனிதைனை மனிதனே விழுங்கலாம் !!!
அறிவியலின் அணுகுண்டில்
அகிலமே சிதறலாம் !!!
ஏன் பிறந்தோம் என்ற
எண்ணம் தோன்றலாம் !!!
சூரியனின் சூடு தாங்காமல்
கிரகங்கள் உருகும்
நாள் நெருங்கிவிட்டது
பூமியின் ஆயுள்
பெருமளவு சுருங்கிவிட்டது !!!
அறிவியல் என்னும் ஆயுதத்தால்
இயற்கையை கொன்றதற்கு
இறைவன் பழிவாங்கும் நாள்
பக்கத்தில் வந்து விட்டது !!!
அடுத்து வரும் சந்ததிக்காய்
அறிவியலைக்
கொஞ்சம் புறக்கணிப்போம் !!!
ஆளுக்கொரு மரம் வளர்ப்போம்
பூமியை குளிர்விப்போம் !!!
அழுது கொண்டிருக்கும்
இயற்கைத் தாயின் கண்களை
மரமென்னும் விரல் வளர்த்து துடைப்போம் !!!
இனியேனும் யோசிப்போம்
இயற்கையை நேசிப்போம் !!!