நல்லதை விதைப்போம் நல்லதையே அறுவடை செய்வோம்

ஒர் நல்ல மனிதர் இறந்து போனபின் சொர்கவாயிலின் வழியாக சொர்கத்திற்கு போகும் சமயம் அங்குள்ள நீண்ட சுவரில்நிறைய கடிகாரங்கள் மாட்டி இருப்பதையும் அவைகள் விதவிதமான நேரங்களை காண்பித்து கொண்டிருப்பதை பார்த்து வியப்பாக எம தூதர்களிடம் கேட்கிறார்

எதற்காக இத்தனை கடிகாரங்கள் ஏன் இவைகள் விதவிதமான நேரங்களை காண்பிக்கின்றன என அதற்கு எம தூதர்களில்
இவைகள்எல்லாம் மனிதனின் பாவங்களை பொறுத்து கணக்கீடு செய்வதற்க்காகவைக்கப்பட்டுள்ளன.

பாவங்கள் அதிகரிக்க அதிகரிக்க இந்த கடிகார முட்களின்
ஓட்டங்கள் மிகவும்வேகமாக இருக்கும் பின்னர் அதன் படியே அவரவரின் தண்டணைகள் இறந்த பின் தீர்மாணிக்கப்படும் என கூறினான்

இதை கேட்டு வியந்த அந்த மனிதர் தனக்கு தெரிந்த ஒர் அரசியல்வாதியின் பெயரை சொல்லி அவர் கடிகாரம் எங்குள்ளது என கேட்க எமதூதன் கூலாக அந்த கடிகாரம் எமதர்மராஜன் படுக்கை அறையில மின்விசிறி பழுதடைந்துள்ளதால் மினவிசிறிக்கு பதிலாக எமன் புழுக்கம் அடையாமல் இருக்க மாட்டியுள்ளதாக கூற கேட்ட நபர் வியப்படைந்தார் இப்டியும் உண்டா என

ஆதலால் நல்லதை விதைப்போம் நல்லதையே அறுவடை செய்வோம்.

எழுதியவர் : செல்வமணி - இணையம் - ராமகிரு (28-Sep-15, 11:49 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 282

சிறந்த நகைச்சுவைகள்

மேலே