முரண்

காற்றாடி சுழலவில்லை
காற்றாலை சுழல்கிறது
பலத்த காற்று.
**********
செங்கலறுப்பவன் அழுகிறான்
விவசாயி புன்னகைக்கிறான்
பலத்த மழை.
***********
மாடி வீட்டுக்கு வெளியே,
குடிசை வீட்டுக்கு உள்ளே,
மழைநீர் சேகரிப்புத் திட்டம்.
***************

எழுதியவர் : சுகுமார் சூர்யா (30-Sep-15, 6:10 pm)
Tanglish : muran
பார்வை : 152

மேலே