பிளாக் ஹோல் - இருட்டு ஒரு வழி பாதை

மாபெரும் அண்டவெளியானது இறைவனால் படைக்கப்பட்டிருந்தாலும் சரி, இயற்கையால் படைக்கப் பெற்றுருந்தாலும் சரி, அண்டமானது தனக்குள் பல கோடி மர்மங்களையும், ரகசியங்களையும் மறைத்து வைத்திருக்கிறது என்பது மட்டும் மிக உறுதி.

அப்படியாக, அண்டத்தின் பெரும் எதிர்பார்ப்புக்குள் இருக்கும் மர்மங்களில் வேற்றுகிரக வாசத்திற்கு அடுத்தபடியாக இருக்கும் விளங்காத ரகசியம் தான் - பிளாக் ஹோல் (Black hole). அண்டவியல் வல்லுநர்கள் மற்றும் வானியல் இயற்பியலாளர்களை பொருத்தமட்டில் பரிணாமத்தின் இறுதிகட்டம் தான் - பிளாக் ஹோல்.

பிளாக் ஹோல் எனப்படுவது கருந்துளை அல்லது கருங்குழி எனப்படும். பிளாக் ஹோல்களை பார்க்கவும் முடியாது, அளக்கவும் முடியாது, பரிசோதிக்கவும் முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏனெனில் ஒளி உட்பட, உள்ளே செல்லும் எதுவுமே வெளிய மீள முடியாத வண்ணம், பிளாக் ஹோல் மிகவும் அதிகப்படியான ஈர்ப்பு சக்திதனை கொண்டது.

பிளாக் ஹோலின் ஒருவழி பாதையில் மின்காந்த அலைகள் கூட வெளியே தப்ப முடியாது என்பதால், அதனுள் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ளவே முடியாது என்பதுதான் நிதர்சனம்.

பிளாக் ஹோல் மூலம் நடக்கும் ஈர்ப்பு நிகழ்வுகளை வைத்தே பிளாக் ஹோல் இங்கே இருக்கின்றது என்பதை கணிக்க முடியும். சில தருணங்களில் அண்டவெளியில் நடக்கும் விசித்திரமான ஈர்ப்பின் மூலமே பிளாக் ஹோல் இருப்பை விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

அப்படி இருக்க, பிளாக் ஹோல் கண்டுப்பிடிக்கப்பட்டு விட்டதாகவும், அது நாம் நினைப்பதை விட 30 மடங்கு பெரியது என்றும் ஆராய்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளனர் சில விண்வெளி ஆராய்ச்சியாளர்கள்.

இது சார்ந்த ஆராய்ச்சியை சில விண்வெளி ஆராய்ச்சியாளர்கள், கீலி (Keele) மற்றும் சென்ட்ரல் லன்கஸைர் (Central Lancashire) பல்கலைகழகத்தில், நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த ஆய்வின் படி, புதிதாக கண்டுப்பிடிக்கப்பட்டுள்ள பால்வெளி மண்டலம் ஒன்றின் நடுவே மிகவும் பிரம்மாண்டமான பிளாக் ஹோல் இருப்பதாக கூறுகின்றனர். மேலும் அந்த பிளாக் ஹோல் ஆனது, இது வரையிலாக உள்ள பிளாக் ஹோல் சார்ந்த கோட்பாடுகளில் கணிக்கப்பட்டதை விட மிகவும் பெரியதாக இருக்கின்றது என்றும் கூறுகின்றனர்.

புதிதாக கண்டுப்பிடிக்கப்பட்ட பால்வெளி மண்டலமானது நாசாவின் ஸ்பிட்ஸர் ஸ்பேஸ் தொலைநோக்கி (Spitzer Space Telescope) மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.

பிறகு அந்த பால்வெளி மண்டலத்தின் நடுவே பிளாக் ஹோல் இருப்பதை அறிந்த பின், அதை ஆராய சதர்ன் ஆப்ரிக்கன் லார்ஜ் தொலைநோக்கி (Southern African Large Telescope) பயன் படுத்தப்பட்டது.

பொதுவாகவே பிளாக் ஹோல் சூரியனை விட 350,000,000 மடங்கு பெரியதாக இருக்கும் என்ற கணிப்பு விஞ்ஞானிகள் மத்தியில் நிலவுகிறது.

தற்போது கணித்ததை விட பிளாக் ஹோல் பெரியது என்ற ஆய்வின் முடிவு பிளாக் ஹோல் வளர்ந்து கொண்டே இருக்கிறதா..? என்ற கேள்வியை கிளப்பி உள்ளது. அல்லது பால்வெளி மண்டலங்கள் முதிர்ச்சியை நிறுத்திக் கொண்டு விட்டனவா..? என்ற கேள்வியும் விஞ்ஞானிகள் மத்தியில் தற்போது எழுந்துள்ளது. சில விஞ்ஞானிகள் மேற்க்கூறப்பட்ட அத்துணை கருத்துக்களையும் மறுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உண்மையாகவே 'SAGE0536AGN' என்ற புதிய பால்வெளி மண்டலம் கண்டுபிடிக்கப்பட்டதா அல்லது அது வெறும் கதையா என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது....

From : GIZBOT

எழுதியவர் : (7-Oct-15, 6:14 pm)
சேர்த்தது : அரவிந்தன்
பார்வை : 448

மேலே