முக்கிய வேலை - நகைச்சுவைக் கவிதை 1
...........................................................................................................................................................................................
அலுவலகத்தில் முக்கிய வேலை..!
முக்கிய வேலை..! முக்கிய வேலை..!
அலாரம் கூட வைத்தாயிற்று.
வைத்தாயிற்று.... வைத்தாயிற்று.
பீப் பீப் பீப்...
ஐந்து நிமிடம் படுத்தால்
குடி முழுகிப் போகாது...!
பீப் பீப் பீப்...
ஐந்து நொடிக்குள்
அடிக்கிறதோ அலாரம்..!
பீப் பீப் பீப்...
எழுந்து படுத்து..., எழுந்து...
துலக்கி குளித்து முடித்து..
அதோ.. அதோ.. அதோ..
தூ....ர ஓடி, பேருந்து பிடித்து..
பீப் பீப் பீப்...
அலுவலகம் சென்று...
ஆட்டைத் தூக்கி மாட்டில் போட்டு....
தணிக்கை... தணிக்கை... தணிக்கை...
அங்கே கடித்து இங்கே பிடித்து..
தணிக்கை...! தணிக்கை...! தணிக்கை... !
வெற்றி..! வெற்றி..! ! வெற்றி..!
பீப் பீப் பீப்...
டாடா காட்டி, வீடு கிளம்பி
டாலடிக்கும் வெயிலைச் சபித்து..
இதோ.. இதோ.. இதோ..
பேருந்துப் படியில் பொத்தென்று விழுந்தால்.......
பேருந்து
கட்டிலானது எப்படி?