லவ் அட்லேண்டிக்

இது காதலர்களுக்கென்றே
படைக்கப்பட்ட புது உலகம்...!
இதயமற்ற யாருக்கும்,
இங்கே இடம் கிடையாது......

இங்கே இயந்திரங்கள் கிடையாது
இதயங்கள் மட்டுமே....!
காதலையும், காதலர்களையும் தவிர,
இங்கே யாருக்கும் அனுமதியில்லை.....

இங்கே மரங்களின் மீது கூட,
மலர்களின் வாசம் வீசுகின்றது.....
அவைகளெல்லாமே,
காதலர்களின் மூச்சுக் காற்றல்லவா.....

வீதியெங்கும் நூலகங்கள்,
காதலைப் பற்றிய புத்தகங்கள் மட்டுமே......
படிக்கப் படிக்கப் பிடிக்கின்றது,,,,
காதலையும் காதலர்களையும்.........

எங்கு பார்த்தாலும் ரோஜாச் செடி
காதலர்கள் வசிக்கும் உலகல்லவா
ரோஜாக்கள் இல்லாமலா....?

காதலர்களுக்காகவே பிறப்பதில்,
பெருமிதம் கொள்கின்றன...
ரோஜாப் பூக்கள்...

இது காதலர் உலகம்,
இங்கு கிமு கிபி - கள் கிடையாது........
காமு காபி - கள் தான்,,,
காதலுக்கு முன், காதலுக்கு பின்......!

வீதியெங்கும் பூங்காக்கள்,
அத்துமீறா காதலர்கள்......
ஆச்சரியம் தான்,
ஏனெனில்,,,
இது காதலர்கள் வசிக்கும் உலகல்லவா........

இங்கே சவப்பெட்டிகள் கூட,,,
சந்தன மரத்தில் தான்,
செய்யப்பட வேண்டும்.....
ஏனெனில்,
காதலர்கள் இறந்த பின்பும்,
மதிக்கப்பட வேண்டியவர்கள்......!

இயற்கையையும் காதலையும்,
எத்தனைமுறை வர்ணித்தாலும்.
கவிதைகள் தீர்வதே இல்லை..........!

காதலர்களுக்கு,
காற்றை விட,
கவிதைகள் தான் அதிகம் தேவைப்படுகின்றது,,,
(சு)வாசிக்க ....!

எழுதியவர் : அகத்தியா (8-Oct-15, 11:28 am)
சேர்த்தது : அகத்தியா
பார்வை : 78

மேலே