பொக்கிஷம்
எனக்கு கிடைத்த கவிதை பொக்கிஷம் இது....
தேர்வு செய்யாதீர்கள் என் கவிதை எவருக்கும் போட்டி இல்லை....
தடை செய்யாதீர்கள் என் கவிதை எவரையும் காயப்படுத்த வர வில்லை....
இரக்கம் காட்டாதீர்கள் என் கவிதை எல்லாம் உண்மைகள் இல்லை....
பாவனை செய்யாதீர்கள் என் கவிதை எங்கிருந்தும் திருடப்படவில்லை....
ஆச்சரியம் கொள்ளாதீர்கள் என் கவிதையில் புதியதாக எந்த மொழியும் சேர்க்கப்பட வில்லை....
முன் நிறுத்தி பார்க்காதீர்கள் என் கவிதை நீளமும் அல்ல.... பின் நிறுத்தி பார்க்காதீர்கள் என் கவிதை குறுகியதும் அல்ல....
சமமான காலத்தில் சமநிலை இது.... உயர்வான இதயத்தில் உயர்வானது.... தாழ்வான இதயத்தில் தாழ்வானது....
எதை உணர்த்தி வழி நடத்த
எதை உணர்ந்து வழி அமைக்க
விழி சாய்ந்து இமை மூட வலி குறைந்து வரி தேட
எனக்கு கிடைத்த பொக்கிஷம்
இது
!...உன்னோடு நான்
உனக்காக நான்...!