இல்லத்தரசி

இல்லத்தரசி
"""''''''"""""""""""'
பார்த்து பேசி
பழகிய பிரியத்தை
தொலைத்து!

அழவதற்கு நிமிடங்கள் இல்லாமல்!

அவசர நிர்ப்பந்தங்களில்
தன்னை மணமகளாக
உருமாற்றி போலியான
புன்னகையை படரவிட்டு

இடையே வந்த கண்ணீரில்
முகப்பூச்சு கலைவதை
அறியாமல்!
எல்லாவற்றிக்கும் தலையாட்டி மௌனமாகி!
தாலி கழத்தை அலங்கரிக்க
புகுந்த வீட்டில் கால் பதிக்கிறாள்!

நினைவு சுமையை
இறக்கி வைக்க முயற்சிக்கும்"""""
நாளைய இல்லத்தரசி

லாஷிகா

"""""""""''''''''

எழுதியவர் : லவன் டென்மார்க் (9-Oct-15, 12:06 am)
சேர்த்தது : லவன்
Tanglish : illatharasi
பார்வை : 74

மேலே