கடவுள் கொடுத்த வரம்
நீண்ட நாட்களாய் மனிதன் ஒருவன் வேண்டி வரம் கேட்டான்....
நேரில் வந்த கடவுள் இரண்டு பேனாவைக் கொடுத்து ஒன்றை பயன்படுத்தி பிடித்ததை மட்டும் எழுது மற்றொன்றை பயன்படுத்தி பிடிக்காததை மட்டும் எழுது உனக்கு நிச்சயமாக கேட்கும் வரம் தருகிறேன் என்று கூறி விட்டு கடவுள் மறைந்து விட்டார்....
அந்த மனிதன் இரவும் பகலுமாய் எழுத தொடங்கினான்.... இரண்டு பேனாவின் மையும் தீர்ந்து போனது.... உடனே கடவுளை அழைத்து வரம் கேட்டான்....
கடவுள் அவனிடம் எழுதியதை முதலில் காட்டு என்றார் அவனும் சற்றென்று எடுத்து காண்பித்தான்.... அதை பார்த்த கடவுள் சொன்னார் நான் பிடித்ததை ஒரு பேனாவை கொண்டும் பிடிக்காததை ஒரு பேனாவை கொண்டும் தானே எழுத சொன்னேன் நீ இரண்டு பேனாவையும் பிடித்ததிற்கு மட்டுமே செலவு செய்திருக்கிறாய் என்று கடவுள் கேட்க.... அதற்கு அவன் சொன்னான் கடவுளே எனக்கு பிடித்ததை நிரப்பவே இன்னும் போதவில்லை அந்த பேனா என்றான்....
அதற்கு கடவுள் சொன்னார் உனக்கு கொடுத்ததில் பகிர்ந்து கொள்ளவே முடியவில்லை.... இன்னும் கொடுப்பதில் மட்டும் எப்படி பகிர்ந்து கொள்ள முடியும்....
உன் ஆசைக்கு என்னால் பரிசளிக்க முடியும் உன் பேராசைக்கு என்னால் பரிசளிக்க முடியாது இது தான் உனக்கு நான் கொடுக்கும் பரிசு என்று கூறி மறைந்துவிட்டார்....
!...உன்னோடு நான்
உனக்காக நான்...!