குலசேகரபட்டினம்
இக்கவிதைப் போட்டிக்காக
தூத்துக்குடி மாவட்ட ஊர்கள் பற்றிய
தகவல் முத்துக்களை திரட்ட எண்ணி
தேடு எஞ்சினைப் பற்றியபடி
வலைகடல் நீந்தப் புறப்பட்டபோது,
எழுத்து தளத்துக்கே இன்று
ஒரு தகவல் தொகுப்பு வந்தது
குலசை தசரா திருவிழா பற்றி;
இன்றுதான் தெரிந்து கொண்டேன்
தமிழ் நாட்டில் குலசையில்
தசரா ஒரு சிறப்பான திருவிழா என்று;
தெரிந்து கொண்ட தருணமும்
இந்த ஆண்டுக்கான
நவராத்திரி தொடங்கும் தருணம்!
இனி ஒவ்வொரு நவராத்திரியும்
குலசை தசரா நினைவு வரும்!
வலைகடல் நீந்த நீந்த
பிற ஊர்கள் சிறப்பும் அறிவோம்!
தமிழ் நாட்டு ஊர்கள் சிறப்பை
தமிழர் நாம் அறிதல் நன்று.