அட இதான்டா அன்பு
" அட ...இதான்டா அன்பு "
அன்பின் ஜனனத்துக்கு
அமுதத்தின் ஆசி இருப்பதால்
அன்புக்கு என்றுமே அழிவு இல்லை .
இப்படி...
உயில் எழுதிக் கொண்டிருக்கும் போதே
உயிரை விட்டது உன்னதக் காதல்
உயிலைக் கண்ட உத்தமக் காமம்
புனிதப் புணர்ச்சியைக் கண்ணீரால் கழுவுகிறது
'அட... இதான்டா அன்பு' என்று
அடுத்த நொடி புளகாங்கிதம் கொள்கிறது

