காதலில் உறைந்தேன்

என் கண்கள் உன்னை
காணாத போதுதான்,
நான் உன் மீது
வைத்திருக்கும்
காதலின் ஆழத்தை
என் மனம்
உணர்கிறது.....

உன் மௌனம் சொல்லும்
அத்தனை வார்த்தைகள் தான்
என் செவிக்குள் இறங்கி
மிதக்க விடுகிறது,
என்னையும்
என் மனதையும்,

கரை சேராவிட்டால்
உள்ளுக்குள்
உறைந்து விடுவேன்,

ஒரு வார்த்தை ஒரே வார்த்தை
சொன்னால் போதும்,


நான்
உயிர்த்தெழுவேன்!

எழுதியவர் : செல்வமணி (17-Oct-15, 12:47 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 88

மேலே