அப்துல் கலாம்

வானமே வீடாக கொண்டவர்
வாழ்கையில் எளிதாக நின்றவர்
பேச்சில் உயிர்மூசை நீத்தவர்
இங்குளோர் மூச்சிலே சேர்த்தவர்

விண்ணதில் நம்கொடியை நாட்டினார்
உலகமே திரும்பிபார்க்க காட்டினார்
பேச்சிலே ஊர்யெங்கும் சுற்றினார்
பேய்கரும்பில் தன்னுடலை பூட்டினார்

அறத்தின் வழியில் வளர்த்தார்
அறிவியல் கொண்டு உயர்ந்தார்
நூழை உணவாக சுவைத்தார்
நூறாண்டுக்கு குறைவாய் பிரிந்தார்

நடமாடும் நூலகம் நடக்க மறுத்ததே
நாடெங்கும் நூலகம் திறக்க மறுத்ததே
நூலகமும் இறங்கல் தந்ததே - வரலாற்று
நூலாய் அவர் உருவம் வந்ததே

என்றும்
கவிதைபிரியன்

எழுதியவர் : (20-Oct-15, 1:44 am)
பார்வை : 126

மேலே