உன் முறைப்பு எனக்கெதுக்கு

உன் முறைப்பு எனக்கெதுக்கு?
புன் சிரிப்பும் உனக்கிருக்கு..
கண்ணுக்குள்ளேன் கோபம் வைத்தாய்..
பேசவந்தஎன் வாயைத் தைத்தாய்...

பச்சை மிளகாயைக் கடித்துவிட்டாயோ..
பாகற் காயைத்தான் ருசிபார்த்தாயோ..
அரண்ட எனக்கொரு அருள்புரிவாயோ..
பொருள் ஏதும்வேண்டாம் புன்னகைப்பாயோ..

கோபம் முறைப்புகளை அழித்துவிட்டு
புன்னகை சிரிப்புகளால் வெளுத்துக்கட்டு
உன்னாலே நானிருக்கேன் வியர்த்துக்கிட்டு
தன்னாலே சாந்தமாவாய் உணர்ந்துகிட்டு

காசுபணம் தேவையில்லை சிரிப்பதற்கு
பாசமனம் மட்டும்போதும் புன்னகைக்கு
தவறிருந்தால் மன்னித்திடு புன்னகைத்து
முடியவில்லை உன்கோபம் தாங்குதற்கு...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (22-Oct-15, 6:29 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 580

மேலே