மகாகவியோடு ஒரு மாலை நேரம் - பாகம் 2 -சந்தோஷ்

வணக்கம் தோழர்களே..

மகாகவி தமிழன்பன் பிறந்தநாள் விழா ,
தமிழன்பன் விருது மற்றும்
நூல் வெளியிட்டு விழாவிற்காக

**திருப்பூரிலிருந்து இரயில் மூலம் சென்னையிலுள்ள பெரம்பூரில் எனது நண்பர் ஒருவரின் அறைக்குச் சென்று. அங்கு குளித்து புத்துணர்ச்சி பெற்று மைலாப்பூருக்கு ஆட்டோவில் சென்றேன்.

கவிக்கோ மன்றத்திற்கு செல்லும் வழியில் நடிகர் சங்கத்தின் தேர்தல் ஒரு பள்ளிகூடத்தில் நடைப்பெற்றதால் பாதுகாப்பு காரணத்திற்காக போக்குவரத்து காவலர்கள் தடம் மாற்றி ஜனநாயக(?) முறையோடு அலையவிட்டதால்…ஆட்டோக்காரர் மைலாப்பூர் உட்லாண்சு உணவகத்தில் இறக்கிவிட்டு சென்றுவிட்டார்..ஏற்கனவே உடல் அசதி வேறு. இனி எவ்வளவு தூரம் நடப்பது என சிரமத்தோடு எண்ணி. சலிப்படைந்தேன்.. அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த நாம் தமிழர் கட்சியிலுள்ள தோழர் எனக்கு உதவிப்புரிந்து கவிக்கோ மன்றத்தில் இறக்கிவிட்டார். அப்போது மணி மாலை 3 30,

மாலை 4 மணியளவில் விழா தொடங்கிவிடும். தோழர்கள் வந்து இருப்பார்கள் என அவசரம் ஆர்வமாக சென்றால்.. கவிக்கோ மன்ற வாசலில் வரவேற்பு பதாகைகள் மட்டும் தான் இருந்தன, மேல் மாடியில் அரங்கம். படியேறும் போதே எதிர்பட்டனர் தோழர் திரு.வேளாங்கண்ணி மற்றும் திருமதி. புனிதா வேளாங்கண்ணி தம்பதியினர். அன்பான பண்பான.. நட்பான தோழர்கள் அவர்கள். இவர்களின் செல்லக்குழந்தைகள்.. அழகான இரு குட்டிப்பாப்பா தேவதைகள். ( குழந்தைகளுக்கு சாக்லேட் எதுவும் நான் கொடுக்கவில்லையே என வருத்தம் எனக்கு ) நலம் விசாரிப்புக்கு பின்.. அரங்கத்திற்குள் சென்றால் ..

வலது புறம், ஒரு மேஜையில் தமிழன்பன் ஐயா எழுதிய புத்தகங்கள் , அகன் ஐயா தொகுத்த புத்தகங்கள் மற்றும் கவிஞர்கள் எழுதிய நூல்கள் , இலக்கிய இதழ்கள்..... விற்பனைக்கு இருந்தன.

அரங்கிற்கு உள் நுழையும் போதே.. நமது எழுத்து தோழர்கள் தமிழன்பன் ஐயாவிற்கு எழுதிய தமிழன்பன் எண்பது சிறப்பு கவிதை தொகுப்பும்... ஒரு கையடக்க நிகழ்ச்சி நிரல் புத்தகமும் தோழர் ஒருவர் கொடுத்தார். அதில் மகாகவி ஐயாவின் வரலாறு. அவர் எழுதிய நூல்கள். சாதனைகள் போன்றவை சுருக்கமாக தெளிவாக இருந்தது. அதுபோல, சென்றாண்டும் இந்தாண்டும் தமிழன்பன் விருது பெற்ற/பெறுவோரின் பட்டியலும். வெளியிடப்படும் நூல்களின் விபரமும்.,விழாவில் கலந்துக்கொள்ளும் தலைவர்கள், அறிஞர்களின் பெயர்களும்.. புகைப்படங்களும்... கூடவே விருது மற்றும் நூல் தொகுப்பிலுள்ள நம் தோழர்களின் புகைப்படங்களும் இருந்தன. கையடக்க புத்தகத்தின் முன் அட்டையில் தமிழன்பன் ஐயாவின் கவிதையொன்றும் இருந்தது.

இதையெல்லாம் பெற்றுக்கொண்டு சுவற்றிலுள்ள பாரதியார் உள்ளிட்ட கவிஞர் மேதைகள் ஒவியங்களை ரசித்த என்னை... கவிக்கோ மன்றத்தின் குளிர்சாதனம் குளிர்வித்தது. அது அப்போது தேவையாகவும் இருந்தது.

மேடையருகே.., ஓர் இளைஞர் சுறுசுறுப்பாக இயங்கியவாறு விழா ஏற்பாடுகளுக்காக அங்கு பணியிலிருந்த தோழர்களுக்கு குறிப்புக் கொடுத்திருந்தார். அருகில் சென்று இரு கை கூப்பி “ வணக்கம் ஐயா ! நான் சந்தோஷ் “ என்றேன்.. அழகான புன்னகையோடு ”சந்தோஷ்....! “ என பதில் வணக்கம் தெரிவித்து கைகுலுக்கி வரவேற்ற அந்த இளைஞர் நமது தோழர் திரு. அகன் ஐயா..!

பிறகு, சந்தோஷ் என ஒரு குரல். மிகவும் பழக்கப்பட்ட குரல்... இவரும் இளைஞரே... திரும்பி பார்த்து அருகில் சென்று நான் அணைத்துக்கொண்ட இந்த அழகான இளைஞர் தோழர்.. திரு. பழனிகுமார் ஐயா..! ஐயாவின் கவிதைகள் எப்போதும் சமூக சிந்தனை கண்ணோட்டத்தில் இருக்கும். ஒரு முறை நான் ஐயாவை “ சிந்தனைச் சிற்பி” என அழைத்து பெருமைப்பட்டுக்கொண்டேன்.

பின்பு, நான் சந்தித்தது மரபுக்கவிதையில் அசத்தும் அற்புத புலவர் ஐயா திரு. கருமலைத் தமிழாழன். தப்பித்தவறி அவர் நாவிலிருந்து ஓர் ஆங்கில சொல் கூட வரவில்லை. இயல்பாகவே தமிழில் அழகாக பேசக்கூடியவராக இருப்பார் என அறிந்துக்கொண்டேன். எனையும் மரபுக்கவிதை எழுதச் சொல்லி ஊக்கம் தந்தார்.

சற்று நேரத்திற்கு பிறகு எனது அன்பிற்குரிய அம்மா வெண்பா அரசி.... திருமதி. சியாமளா ராஜசேகர் அவர்களை கண்டு நலம் விசாரித்து. ஆர்வத்தோடு பேசினோம். அடுத்து தளத்தில் ஒவியங்கள் கவிதைகள் போன்ற படைப்பாக்கத்திலும்.. பழங்களில் சிற்பம் செதுக்குவதில் வல்லவராக திகழும் சிறப்பாக படைப்புத்திறனுள்ள அம்மா திருவாளர்.கிருபா கணேஷ் சந்தித்து பேசியது மனம் நிறைந்தது.
அடுத்து,

நம் எழுத்து தளத்தில் சிறுகதை. கவிதை எழுதுவதில் ஒரு சுஜாதா இருக்கிறார். அனைவருடனும் அன்பாக பண்பாக பழககூடிய எளிமையான மனிதர். இவரும் ஒர் இளைஞர் தான் எனக்கு. அவர் ஐயா திரு. முரளி அவர்கள். பார்ப்பதற்கு எழுத்தாளர் சுஜாதா போலவே இருக்கிறார். பிறகு அவரின் குடும்பத்தினரிடம் என்னை ” நாளைய திரைப்பட இயக்குநர் ” என அறிமுகம் செய்து வைத்தது ஊக்கம் கொடுப்பதாக அமைந்தது.

அடுத்து திருவாளர் ஷைலா ஹெலின் அவர்களை சந்தித்தது பெரும் மகிழ்ச்சி. இவர் தளத்தில் அவ்வளவாக உலாவது இல்லை என்பதால்.. தோழரின் படைப்புகள் கவனத்திற்கு உட்படவில்லை என்றாலும் இவரின் அற்புதமான படைப்பாக்கம் திறம் குறித்து நமது தளத்திலுள்ள வல்லுனர்களிடம் கேட்டு அறிந்து கொண்டேன்.

அபிமானத்திற்குரிய தோழர்கள் ஒரு குழுவாக வந்தார்கள். அவர்கள்... சிறப்புக்கவிஞராகவும் சிறந்த தோழராகவும் திகழும். திரு. ஜின்னா. , ஜனரஞ்சக படைப்பாக்கத்தில் அசத்தும். திரு. தாகு எனும் கனா காண்பவன் எனும் ஹரி குரு. , ரசனைக்கு உட்பட்ட படைப்பில் அசத்தினாலும்.. ரசிக்கும் மனமுடைய திரு. கலா ரசிகன், . வீரியமான படைப்பாக்க திறனுள்ள திரு.சுஜய் ரகு., எனது அன்புத்தம்பி.. அவலங்களை எழுத்தில் தட்டி கேட்கும் ‘ மனோ ரெட்’ எனும் மனோபாலா.

இவர்களுடன்.. அனைவருக்கும் பாகுபாடின்றி கருத்திட்டு உற்சாகம் ஊட்டுபவரும்... சிறுகதை படைப்பாக்கத்தில் எனது குருவாக நான் கருதுபவர்களில் ஒருவரும். முதன் முதலாய் என்னை சிறுகதை எழுத ஆர்வத்தை தூண்டியவருமான.... தளத்தில் இணைந்ததிலிருந்து இதுவரையிலும் இனிமேலும் நான் நட்புகொண்டாடும் ’சிறுகதை திலகம்’. தோழர்... திரு. பொள்ளாச்சி அபி அவர்கள். ஊடகத்துறையில் அசத்திக்கொண்டிருந்தாலும் எழுத்துலகில் பிரபலமாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார் என் அபிமானத்திற்குரிய அபி தோழர். முக்கிய சில பிரபல எழுத்தாளர்களோடும் அறிமுகம் உள்ள தோழர் திரு. அபி.. கம்யூனிஸ்ட் கொள்கைகளில் தீவிர பற்று உள்ளவர். ( விழா முடிந்த அடுத்த நாள் ஊருக்கு செல்லும் போது தோழருடன் இரயில் பயணம் செய்தது மறக்க முடியாத அனுபவம்)

அடுத்து.. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் போன்ற மிடுக்குடன் இருந்த நமது தளத்தில் பல அசத்தலான கவிதைகள் எழுதி வருபவரும் ” தொலைந்து போன வானவில்” தொகுப்பிற்காக ஆங்கில மொழிப்பெயர்ப்பு செய்த சிறப்பான இரு மொழி ஆளுமைப் பெற்றவருமான மதிப்பிற்குரிய ஐயா திரு. ஜோசப் ஜூலியஸ் அவர்கள் ( எப்படியாவது ஐயாவை குறும்படம் ஒன்றில் நடிக்க வைத்திட வேண்டும்.)

அடுத்து சந்தித்தது. தோழர். ஐயா.திரு. ஜி.ராஜன். அற்புதமான பண்பாளர். அசத்தலான கவிதையாளர். அன்பாக பேசினார். ஐயாவின் படைப்பாக்கத்திலிருக்கும் நுணக்கத்திற்கு நானொரு ரசிகன்.

அடுத்து, புதிய கோடாங்கியாக நம் எழுத்து தளத்தில் வலம் வந்துக்கொண்டிருந்த தோழர் திரு, ஆண்டன் பெனியுடன்.. சமீப காலமாக விகடன் இதழில் முத்திரை பதித்துக்கொண்டிருக்கும் சேயோன் யாழ்வேந்தன் என நமக்கு அறிமுகமாகிய திரு. கோபாலகிருஷ்ணன் திருமூர்த்தி.

அடுத்து.. எனது செல்ல தம்பி .. மரபு மைந்தன்.. மகாகவி தமிழன்பன் ஐயாவினால் பாராட்டப்பட்ட திரு. விவேக் பாரதி. கட்டியணைத்து வரவேற்று அன்பை பகிர்ந்துக்கொண்டோம். சத்தியம் செய்து சொல்லுவேன். நிச்சயம் இலக்கிய உச்சம் தொடுவார் இந்த தம்பி...

திரு.ஆசை அஜித். நம் தளத்தில் அனைவரின் படைப்பிலும் வேற்று மொழி சொற்களை கண்டால் மாற்றம் செய்ய கோரும் அருமையான தமிழ் உணர்வாளர். முதன் முறையாக பார்த்தவுடன்... சிநேகம் கொள்ள ஆசைப்படவைப்பதாலோ என்னவோ இவருக்கு ஆசை அஜித் என பெயரோ ? இன்னிசை பாடல்களில் சிறந்து விளங்கும் இவரை/இவர் திறனை விரைவில் வெள்ளித்திரையில் எதிர்பார்க்கலாம்.

சேகுவேரா கோபி....! எனதருமை தம்பி. புரட்சிக்கான விதை இவரின் படைப்புகளில் வீற்றிருக்கும். எழுச்சியான படைப்புகள் எழுதும் தம்பியை நேரில் சந்தித்தால் எளிமையான மனிதனாக இருக்கிறார்.. எந்த பேனாவிற்குள் எந்தவித புரட்சி வெடியிருக்கும்..
Don’t judge books by It’s cover இல்லையா.. ?


மரபுமாமணி திரு .காளியப்பன் எசேக்கியல் ஐயாவை நான் தான் வரவேற்கும் பாக்கியம் பெற்றேன். விழாவில் மரபு மாமணி எழுதிய வாழ்த்துக்கவிதை .. பார்வையாளர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது. தம்பி விவேக்பாரதியும்.. தோழர் புனிதா வேளாங்கண்ணியும் அனைவருக்கும் அக்கவிதை தாளை வழங்கினார்கள்.

அடுத்து தோழர் திரு. குமரேசன் கிருஷ்ணன். குறிப்பிட்ட எனது படைப்பு ஒன்றை எடுத்துக்கூறி அன்பாக பாராட்டினார். ஊக்கம் தரும் வார்த்தைகள் சொல்லி உற்சாகம் தந்தார். இவரின் படைப்பாக்கம் அழகாகவும ஆழமான கருத்தாகவும் மிளிரும்.

பிறகு தோழர் சு.ஐயப்பன். தோழர் திருமூர்த்தி சந்தித்தது பெரும் மகிழ்ச்சி.

அடுத்து ஐயா.தோழர் திரு. . ரமேஷ்லாம் அவர்கள். மிக சிறந்த படைப்பாளி. மட்டுமல்ல. மிகசிறந்த பண்பாளர். இலக்கியத்தில் சிறந்த ஆளுமையாளர் .

இதனிடையே... மாலை நேர சிற்றுணவு மற்றும் தேநீர் அருந்த கீழ் தளத்திற்கு வந்தால்.. அங்கு நம் தோழர்களோடு தோழராக......... எந்தவித பாகுபாடின்றி மிக இயல்பாக ..நின்றுக்கொண்டிருக்கிறார் ஒரு மேதை. யாரிவர் என முகத்தை பார்க்கமாலே.. உருவமைப்பு வைத்து அறிந்துக்கொண்டேன். ஆச்சரியம்.. அதிசயம்... மனம் பரபரக்கிறது, அருகில் சென்று அணைத்துக்கொள்ளலாமா என அவசரப்படுத்தியது எனது பக்குவமற்ற குணம். .. இவர் எழுதிய நூல்களை ஆராய்ச்சி செய்தே முனைவர் பட்டம் பெற்றவர்கள் பலர். பட்டம் பெற ஆராய்ச்சி செய்வோர் பலர். பலபல கவிதைகள் சமூகத்தை தட்டியெழுப்பி இருக்கின்றன. இவரை பற்றி , இவரின் நூல்களை குறித்து பல்கலைகழகத்தில் பாடமே நடத்துப்படுகிறது. அயல்நாடுகளிலும் தமிழை பரப்பசெய்த வல்லவர் இவர். பல பல கவிதை வடிவங்கங்களை அயல்நாடுகளிலிருந்து தமிழுக்கு அறிமுகம் செய்தவர் இவர். பேரத்தமிழ் என புதுவித குறட்பாவை நம் மொழியில் உருவாக்கிய மேதை. 80 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். இந்த 81 ம் பிறந்தநாள் விழாவின் நாயகன். இவரா.. இவரா............. இத்துணை எளிமை.. எந்தவித கர்வமும் இன்றி.... தோழர்களோடு தோழராக.............. மகாகவி ஈரோடு திரு.. தமிழன்பன் ஐயா அவர்கள்.

அருகில் சென்று அறிமுகம் செய்துக்கொண்டு ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டேன் . தோழர்களையும் புகைப்படம் எடுத்துக்கொள்ள வலியுறுத்தினேன்

... இதுவரையிலும் அகன் ஐயாவின் முயற்சியால் வெளியான நமது எழுத்து தளத் தோழர்களின் படைப்புகள் அடங்கிய புத்தகங்களை சென்றாண்டு பெறாமல் இருந்த சில தோழர்களுக்கு வழங்குமாறு அகன் ஐயா என்னிடம் தெரிவித்திருந்தார். அதற்காக, அவசரமாக தேநீர் அருந்திவிட்டு அரங்கிற்குள் சென்றால்.. அங்கு விழா ஆரம்பித்துவிட்டது.

கவிஞர்/ தோழர். திரு. இன்குலாப் . ஐயா சிலம்பொலி சு. செல்லப்பன்.. நீதிநாயகம் திரு. கே.சந்துரு ஆகியோர் மேடையில் இருந்தனர். அகன் ஐயா உரையாற்றி முடித்துவிட்டார். கேட்கமுடியவில்லை எனும் வருத்தம் ஒரு புறம். பார்வையாளர் இருக்கைகள் காலியில்லை., கால்வலி ஒரு புறம். அதுவரை விழாவிற்கு முக்கிய சில தலைவர்கள் வரவில்லை. அகன் ஐயாவிடம் சென்று சில தோழர்களை அறியமுடியவில்லை என சொன்னவுடன்.. என்னை அழைத்து சென்று முகநூலில் சிந்தனைவாதி எனும் பெயரில் அசத்திக்கொண்டிருக்கும் தோழர் திரு.. பரிதி முத்துராசன் அவர்களை அறிமுகம் செய்துவைத்தார்.
பிறகு பகுத்தறிவு கொள்கையில்.. அதன் படைப்பாக்கங்களில் சிறிதும் தடம்மாறாமல் கொள்கைப்பிடிப்போடு இருக்கும் தோழர் திருமதி கெளதமி தமிழரசனை ஐயா அறிமுகம் செய்து வைக்க அவரிடம் புத்தக தொகுப்பு கொடுக்கப்பட்டது.

பின்பு தாமதமாக வந்தார் எனது படைப்பாக்கத்திற்கு இந்த தளத்திலிருக்கும் மற்றொரு குரு., தோழர் திரு. கோவை கவிஜி.. (ஆனந்த விகடனில் 25க்கும் மேற்பட்ட முறையில் தோழரின் கவிதை வெளியாகி இருக்கிறது, பல பிரபல எழுத்தாளர்களுடன் அறிமுகம் உள்ள தோழர். )கவிஜி உடன் என் அன்புதம்பி.. வசீகரமான சொல்லாடலில் கவிதையை மிளரச்செய்யும் தம்பி இராஜ் குமார்.

சற்று நேரத்திற்கு பிறகு டெல்லி வரை சென்று இலக்கிய கூட்டத்தில் கவிதை வாசித்த வந்த அக்கா சொ. சாந்தி அவர்களை சந்தித்தது மகிழ்ச்சி.

இதனிடையே ஆசிரியர். தி.க தலைவர். திரு. கி.வீரமணி., திராவிட முன்னேற்ற பொதுச்செயலாளர் பேராசிரியர் திரு, அன்பழகன். மார்கிஸ்ட் தோழர் சி. மகேந்திரன் அவர்கள் வந்துக்கொண்டிருந்தனர். தலைவர்களை அனைவரையும் மிக அருகில் சந்தித்து .. புன்னகை பரிமாறியது. பேராசிரியரின் உடல் நலத்தை நான் விசாரித்தது எல்லாம் மகிழ்வான தருணம்.

நிகழ்ச்சி ஆரம்பித்த பிறகு மிக தாமதமாக வந்து சேர்ந்தவர் .. ஜனரஞ்சக படைப்புகளில் பிரலமாகி கொண்டிருக்கும் தோழர் குருச்சந்திரன் என்கிற கிருஷ்ண தேவ்,

மேலும் தோழர்கள் தாரகை. புலமி ஆகியோரை சந்தித்ததும் மகிழ்ச்சிக்குரியது.

பார்க்க முடிந்தும் பேசமுடியாமல் போனது அருமையான கவிஞர். அன்பான பண்பாளர் ”தொலைந்து போன வானவில் ”தொகுப்பிற்காக ஆங்கில மொழிப்பெயர்ப்பு செய்த திரு. கருணாநிதி அவர்களை.

திரு. தோழர்.சுசீந்திரன் அவர்களையும் . தோழர் திரு. நரியனூர் ரங்கநாதன் அவர்களையும். தங்கை கிருத்திகா தாஸின் சார்பாக வந்திருந்த தோழரையும் விழா நிறைவு வரையிலும் சந்திக்க முடியாமல் போனது வருத்தமே.

தோழர் திரு மணிமீ அவர்களின் தாயாரையும்.. குழந்தைகளையும் சந்தித்தது பெரும் மகிழ்ச்சி.


சந்திப்புகள் பெரும் தித்திப்புகள் தான். ஆனால் இந்த சந்திப்பு தித்திப்புக்கு காரணமான அகன் ஐயா விழா முடியும் வரை மேற்கொண்ட உழைப்பு. உடல்நிலை சரியில்லாதப்போதிலும்... நிகழ்ச்சி நிரல்படி சரியாக நடந்துக்கொண்டிருந்தாலும்.. சரியாக நடக்க வேண்டுமென மேற்கொண்ட கவனிப்புகள். இதற்கு இடையிலும் எழுத்து தள தோழர்களின் வருகை கவனித்து...வரவேற்று... விருது பெறுவோர் யார் யார் வந்திருக்கிறார்கள் என்பதை கவனித்து அதற்குண்டான ஏற்பாடுகளுக்கு உதவியாளர்களிடம் அன்பாக உத்தரவிடும் நேர்த்தி. தலைவர்களின் உரையை கேட்பதில் ஆர்வம். நமது தோழர்களுக்கு நூல்களை தவறாமல் கொடுக்கவேண்டுமெனும் அக்கறை இதை ....எதையும் எவ்வித பதட்டமும் இன்றி... விழாவை இனிதாக நிறைவு செய்தவிதம்... மிக சிறந்த நிர்வாகத்திறனாளியாகவும். இலக்கியவாதியாகவும் ஒரு சேர இருந்தவிதம்.. ஒரே நேரத்தில் வெளிப்படுத்திய விதம்.. கல்வித்துறை அதிகாரியாகவும் விளங்கும் அகன் ஐயாவிற்கு சாதாரண விடயமாக இருந்தாலும் ..இந்த ஆற்றலை நாம்/நான் அவரிடம் ...கற்றுக்கொள்ள வேண்டியது.


தோழர்களே !!

கட்டுரையின் தொடர்ச்சியாக அடுத்தடுத்த பாகத்தில்.......

**மகாகவி தமிழன்பன் ஐயாவிற்கு முத்தம் கொடுத்த அந்த தோழர் யார் ?

**மகாகவி தமிழன்பன் ஐயா உரையாற்றும் போது நிகழ்ந்த காதல் சம்பவமா.. ?அது என்ன ?

**விழாவில் வெளியிடப்பட்ட நூல்கள் குறித்து சில குறிப்புகள்.

**விருது பெற்ற தோழர்களின் பட்டியலோடு ..சில சந்தோஷ நிகழ்வுகள்.



***
காத்திருங்கள் நாளை மாலை வரை. !!



நன்றி... தோழர்களே..!


**

-இரா.சந்தோஷ் குமார்.

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (22-Oct-15, 4:18 pm)
பார்வை : 307

மேலே