வாழ்க்கை பயணம்
தேயாத நிலவொன்றைத் தேடி..
வாட்டாத வெயில் ஒன்றை நாடி..
வாடாத மலர் ஒன்றை தேடி..
அலையில்லா அமைதியை நாடி..
ஆத்மார்த்த அன்பினை தேடி..
நம்பிக்கை நங்கூரம் ஏந்தி
தொடர்கிறேன் என் வாழ்க்கை பயணத்தை..
தூரத்தில் தெரியும் ஒளியை பார்த்தபடி..

