ரெட்டை வாழ்க்கை

எல்லோருமே வாழ்வது
ரெட்டை வாழ்க்கை தான்...

ஒன்று
நாம் எப்படி என்று
மற்றவர்களுக்குக்காட்டிக் கொள்ளும்
வாழ்க்கை,
முகமூடி வாழ்க்கை

இன்னொன்று
நாம் இப்படித்தான் என்று
நமக்குத் தெரிந்தாலும்
அதை மற்றவர்களிடம்
மறைத்து வாழும் வாழ்க்கை
இது தான் நிஜம்.

பொய்யாக வாழ்ந்து வாழ்ந்து
நிஜத்தைத் தொலைத்து விட்ட
அல்லது மறந்து விட்ட
ஒரே உயிரினம்
நாம் மட்டும் தான்...

எழுதியவர் : செல்வமணி (28-Oct-15, 7:37 pm)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : rettai vaazhkkai
பார்வை : 113

மேலே