போராடு

நெஞ்சங்கள் சேர்ந்தால்தான்
இங்கு கைகளும் சேரும்
கைகள் சேர்ந்தாலே எல்லை ஏதுமில்லை
உணர்வுகள் என்பது என்ன
வெறும் உணர்சிகளா
உணர்வுகள் அற்ற மனிதன்
இங்கு மனிதனில்லை
உலகம் இங்கு ஓடுதடா
ஒய்வு என்றும் இல்லையடா
உலகம் போல உந்தன் வாழ்வும்
ஓடிகொண்டே போகுதடா
இருளை கண்டு அஞ்சாதே
பகலும் வருமே தப்பாதே
பயமே இங்கு உன்னை கண்டு பயந்து ஓடவேண்டாமா
நண்பா நீ நாளும் நாளும் போராடு போராடு
போராட்டம் இல்லா உந்தன் வாழ்வோட்டம் இனிக்காது
நித்தம் நித்தம் வேள்விகளா
நெருக்கி எடுக்கும் தோல்விகளா
இங்கு நீ இருக்கும் இந்த நிமிடம் மட்டும் உன் கையில் உள்ளதடா
நண்பா என் நண்பா நீ எழுந்து நில்லு
தோல்வி அது தூசு நீ எதிர்த்து வெல்லு
உனக்கு கிடைத்த வெற்றிகளை
தனக்கு கிடைத்ததென்று சொல்லி
மகிழ்ச்சி அடையும் மடையர்கள் எல்லாம்
மானம் கேட்ட மனிதரடா
உன்னைவிட உயர்ந்த பொருள்
உலகில் எதுவும் இல்லையடா
உன்னை நீயும் ஆய்ந்து பார்த்தால்
உண்மை உனக்கு புரியுமடா
உன்னோட முயற்சிகளெல்லாம் ஓர் நாள் இங்கு சபையேறும்
சபையேறும் உன்னை இந்த உலகம் அன்று பாராட்டும்
வெற்றி தோல்வி என்று ஒன்று உந்தன் மனதிற்க்கில்லையடா
உன் மனம் கூறும் அந்த இலக்கு மட்டும் உன் வாழ்வின் எல்லையடா
வெற்றி அது தருமே பெரும் போதையடா
அந்த போதை அது எல்லாம் வெறும் மாயையடா

எழுதியவர் : கோபிநாதன் பச்சையப்பன் (28-Oct-15, 7:16 pm)
Tanglish : poraadu
பார்வை : 127

மேலே