விளம்பரம்

விலாசங்களைத்தேடி
வரும் இந்த விளம்பரங்கள்
விரும்புவது, எல்லாம்
எப்படியாவது
விற்கத்தான்;

தரம் மலிவு பார்த்து வாங்க
அவகாசம் தராமல்
அள்ளித்திணிக்கிறது
இந்த விளம்பரங்கள்..

மழலைக்குழந்தைகளின்
கவனத்தைகூட
இலகுவாக ஈர்த்துவிடும்

விளம்பரங்களின் வளர்ச்சி தான்
இங்கே கண்ணுக்கு தெரிகிறது,

வாங்கும் பொருளின் பயனோ,
கொடுத்த காசின் மதிப்போ,
வாடிக்கையாளரின் திருப்தியோ
விற்பவரின் கண்களில்
பொருட்டாக தெரிவதில்லை.

எல்லோரும் இங்கே இயந்திரமயமாய்
இருக்கிறார்கள்;
அவஸ்தைப்படும் போது தான்
அறிந்து கொள்கிறார்கள்..

சொல்ல வேண்டிய விஷயம்
எல்லாம் காணவில்லை,
விளம்பரங்கள் இப்போது
நாசூக்காக, விளையாட்டாக
கவனத்தை மட்டும் திசை திருப்பும்
கண்ணாமூச்சியாக..

பேஷ்ட்டில் புத்துணர்ச்சி,
வேட்டியில் ஜிப்,
சேலை ஒன்றே பகலிலும் இரவிலும் வேறு வேறாய்,
டிசைன்களில் புதிதாய் தினுசு தினுசாய்

நல்ல எண்ணையை காணாது போனது
சன் பிளவர் ரீபைண்ட் ஆயில் எல்லாம்
விளம்பரத்தால் தூக்கி நிறுத்தப்பட்டு
ஆரோக்கியத்தை கழட்டி விட்டது.

தேங்காய் எண்ணை, தென்ன மரக்குடியென்னையும் கூட
விளம்பரத்தில் சிக்கி யுக்திகள் தான் எங்கும் எல்லாம்,

எங்கே போகிறோம்?
எதையோ வாங்குகிறோம்?
எல்லாம் தொலைக்கிறோம்?
எதுவுமே தரமில்லாமல்,
என்னவென்றே புரியாமல்...

எழுதியவர் : செல்வமணி (29-Oct-15, 10:01 am)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : vilamparam
பார்வை : 120

மேலே