ஒற்றுமையே வலிமை
இரு சகோதரர்கள் ஒரு வீட்டில் ஒன்றாக ஒத்துமையாக வாழ்ந்து வந்தனர்,
சில நாட்களுக்கு முன்பு தான் இவர்களது தந்தை அகால மரணம் அடைந்தார், அவர் இறக்கும் முன்னே தன் இரு மகன்களையும் அழைத்து நான் இறந்த பிறகு எனது சொத்துக்களை நீங்கள் இருவரும் சரி சமமாக பிரித்து எடுத்து கொள்ளுங்கள் என்று கூறி இறந்து விட்டார்,
பிறகு இரு சகோதரர்களும் தந்தையின் அணைத்து சொத்துக்களை சரி சமமாக பிரித்து எடுத்து கொண்டனர்,
ஆனால் தந்தை வளர்த்த ஒரு பசுவை மட்டும் சரி சமமாக பிரிப்பதில் பெரும் வாக்குவாதமே நடந்தது
அப்பொழுது தான் இருவரும் ஊர் நாட்டாமையிடம் சென்று முறையிடுவோம் அவரே பசு யாருக்கு சொந்தம் என்று கூறட்டும் என்று முடிவு செய்தனர், நாட்டாமையிடம் இரு சகோதரர்களும் முறையிட்டனர்,
நாட்டாமையோ நீங்கள் இருவரும் இங்கு நில்லுங்கள் உங்கள் முன் 10 அடி தள்ளி பசுவை அவிழ்த்து விடுகிறேன் பசு யாரிடம் வருகிறதோ அவர்களுக்கே சொந்தம் என்று கூறினார்,
கூறிய படி பசுவை இரு சகோதரர்கள் முன் பத்து அடி தள்ளி நிறுத்தி பசுவின் கயிற்றையும் அவிழ்த்து விட்டார்,
பசுவோ இவனிடம் வந்தால் அவன் நம்மை கொண்றிடுவான், அவனிடம் சென்றால் இவன் நம்மை கொண்றிடுவான், இல்லையேல் நம்மை இரண்டாக வெட்டி பங்கு கொள்வர் என்று எண்ணி பசு நிற்காது ஓட்டம் பிடித்தது, ஊரை விட்டே பசு எங்கோ ஓடி விட்டது
கடைசியில் நாட்டாமையோ உங்கள் பசு உங்கள் தந்தையிடம் செல்லத்தான் விரும்பியது போலும் என்று கூறி தீர்ப்பை நிறைவு செய்தார்,,
சகோதரர்கள் இருவரும் இப்பொழுது தான் தாங்கள் பிரிந்ததையும், பிரிந்ததையும் எண்ணி வருத்தம் கொண்டனர்