சாஆதீ

சாதிக்க வேண்டிய என்
சந்ததியினரைப்
பாதிக்கிறதே இந்த
பாழான சாதி!

வீதிக்கு அழைத்து
வெட்டியாய்
வீணடிக்கிறதே
சதியான இந்த சாதி!!

ஆண்டவரும், ஆள்பவரும்
நீண்ட நெடுங்காலமாய்
அபாயமின்றி கொலுவிருக்க
உபாயமாய்ப் பிடித்த
சாதி எனும் சதியை

எப்போது எம்மக்கள்
தப்பென்று உணர்வாரோ???

கவி.முத்துமணி

எழுதியவர் : முத்துமணி (1-Nov-15, 5:09 am)
பார்வை : 104

மேலே