வாழ்வின் பொருளென்ன
அழுகிய மாமிசம் உண்பதா லூரின்
==அழுக்குக ளகற்றிடுங் காகம்.
வழுக்கிடும் சேற்றினில் கால்களை வைத்து
==வயலது உழுதிடும் எருமை.
இழுக்குளத் திருடரை விரட்டிட துணிந்து
==எதிர்த்துக் குரைத்திடும் நாயும்.
கொழுகொழு உடம்பதை வளர்த்திட நமக்கென
==கோழியும் கொடுத்திடும் முட்டை.
எலிகளைப் பிடித்து அழித்திடும் பூனை
==இலகுவாய்க் காத்திடும் உணவை
பலியிடப் படுகிற ஆடுகள் தானும்
==புசிப்பவர் பசியினைத் தீர்க்கும்
நலிவுறும் வரையில் தமக்குள தெதையும்
==நயமுடன் விலங்குகள் செய்ய
வலிதரும் வன்முறை புரிந்திடும் மனிதன்
==வாழ்வதில் பொருளுண் டோசொல்?
*மெய்யன் நடராஜ்