நம்பிக்கையின் நாயகன்

..."" நம்பிக்கையின் நாயகன் ""...
தும்பிக்கை இல்லா யானையும்
நம்பிக்கை இல்லாத மனிதனும்
வாழ்வதினும் மேல் சாவதகும்
எடுத்துக்காட்டவே உலகிலே
இதோ வாழுகின்ற சாட்சிகள் !!!
அவயங்கள் அழகாய் இருந்தும்
உடல்னோகா உண்டேகளிக்க
இல்லாத காரணமே சொல்லி
இலகுவாய் எல்லாம்கிடைக்க
எண்ணிடுவோர் மத்தியிலே நீ !!!
நம்பிக்கை துணையிருந்தால்
ஊனமும் ஒரு பொருட்டல்ல
பிறரை யாசித்து வாழ்வதினும்
மனநிறைவின் மகிழ்ச்சியாய்
உயிருள்ளவரையும் உழைப்பு !!!
எதுவுமிங்கே சாத்தியம்தான்
எண்ணமது மேன்மைகொள்ள
உந்தன் விடாத முயற்சிகளும்
உழைத்திட துடிக்கின்ற மனமும்
உன்னலவிற்கோ நானில்லை !!!
ஊனத்தினிழப்பு நானுமறிவேன்
இறைவனினின் அருளானான்
மயிரிழையில் உயிர்பிழைத்து
கால்களிலொன்று செயலிழந்து
வாழ்வின் முறையே மாறிவிட !!!
என் அன்னையின் ஊக்கமும்
அண்ணனின் உறுதுணையும்
அன்பு குறையா கிடைத்ததால்
எட்டு ஆண்டு சென்றபின்னும்
எட்டெடுத்தே நடக்கின்றேன் !!!
என்றும் உங்கள் அன்புடன் ,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...