ஆசைகள் அசுவங்கள் ஆனால்
ஆசைகள் அசுவங்கள் ஆனால்
சேணத்தைக் கையில் பிடித்து
ஆசனங் கொண்டு அதிலே
உலகைச் சுற்றிட வேண்டும்
யோசனை செய்திடு முன்னர்
நாசம்செய் மனிதர் பலரை
சாசனம் கொண்டு நானும்
சகதியில் தள்ளிட வேண்டும்
ஓட்டென வந்து கேட்போர்
ஒய்யாரம் தன்னை வீழ்த்தி
காட்டிடும் சிறையில் தள்ளும்
காவலன் நானாக வேண்டும்
.ஈட்டிய ஊழல் பணத்தை
ஊட்டியில் பதுக்கிய சொத்தை
வேட்டியில் குவித்து எடுத்து
ஏழைக்குத் தூவிட வேண்டும்
மாட்டு இறைச்சி உண்டால்
மண்டையைப் பிளக்கும் அவரை
குண்டு வெடிக்கச் செய்து
உயிரினைக் குடிக்க வேண்டும்
பாலகர் தம்மைப் பிடித்துப்
பாலியல் வதம் செய்வோரை
பாடையில் கட்டிப் பொசுக்கிச்
சாம்பலைத் தெளித்திட வேண்டும்