ஸ்பரிசம்

காடு மலை மேடெல்லாம்
அலைந்து திரிந்த மேகம்...
தென்றல் அவளைக் கண்டு
மையல் கொண்டதாலே..
சிந்திச் சென்ற சாரல்..

சின்னச் சின்ன சிதறல்கள்
சில்லென்று பட்டுத் தெறிக்க..

அதன் விரல் நுனிப் பற்றிக் கொண்டு
'போகதே போகதே.. நீ பிரிந்தால்...
நான் அழுவேன்'... என்று
செல்லச் சண்டை பிடித்துக்
கொண்டு சினுங்குகின்றது - என்
சன்னல் கண்ணாடி...

அதை ரசிக்கக் கூட எனக்கு
அவகாசம் கொடுக்காமல்...
சில்லிட்டு இருந்த என் இதழ்களில்
இதமாய்.. இனிமையாய்..
படிந்த ஸ்பரிசம்..

இதழ் தொட்டுத் தொடங்கிய
இதமான உஷ்ணம்...
என் உடலுக்குள் மிதமாகப் பரவி..
சொர்கத்தின் வாயில் வரை
இழுத்துச் சென்று..
இயல்பு மறக்கச் செய்தது..

நடுங்கிய கரங்களால்
அதற்கு மேல் தாக்குப்
பிடிக்க முடியவில்லை..
மேஜை மேல் வைத்து விட்டேன்
காபி கோப்பையை!

மழை நேரத்தில்
கிறங்கடிக்கும் COFFEE ...

இது போதும் எனக்கு..
இது மட்டும் போதும்..
வேறென்ன வேணும்...
உயிர் வாழவே...!

எழுதியவர் : ஜனனி (8-Nov-15, 11:07 am)
பார்வை : 256

மேலே