தாய்தான் மகத்துவமே 1 --- கட்டளைக் கலித்துறை

நன்றி பலநாள் நவின்றிட நானும் நலமுடனே
உன்றன் பெயரை உதிரமாய் நெஞ்சில் பதித்திடுவேன் .
என்ற னுயிரை எனக்கெனத் தந்தே எனைவளர்த்தாய்.
மன்றில் மகவாய் மலர்ந்திடச் செய்த மகத்துவமே .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (9-Nov-15, 11:13 am)
சேர்த்தது : sarabass
பார்வை : 99

மேலே