அன்பு தோற்பதுமில்லே
பிறக்கும் முன்னே வந்த உலகம் இன்னும் இருக்குடா
நீ இறந்த பின்னும் இந்த உலகம் என்றும் இருக்குன்டா
கண்ணா என்றும் இருக்குன்டா
என்னை வெறுக்கும் உன்னாலே வாழ முடியும் போது
அன்பை விரும்பும் என்னாலே வாழ முடியாதா ?
சொல் வாழ முடியாதா ?
யதார்த்தம் என்னும் போர்வையிலே
புகுந்துகொள்ளும் வேளையிலே
எத்தனை எத்தனை இன்பம் தினம் தினம் இழப்பாய்
உன் கற்பனைக்கெட்டா காட்சிகளெல்லாம் வாழ்வில் உண்டடா
நீயும் கண்ணை திறந்து பார்
பஞ்சபூத அன்பாலே உலகம் இங்கு வந்தது
பாழாய்ப்போன மனுஷனுக்கு இது எங்க புரியுது
வெறுப்பை காட்டி உலகத்திலே
வெல்லப்போவதேதுமில்லே
அன்பாலே தோல்வியை காணபோவதுமில்லே நீ
அன்பில்லாமல் காணும் வெற்றி வெற்றியுமில்லே
அன்பு தோற்பதுமில்லே

