மீண்டும் மீண்டும் - போட்டியிட்டுத் தோற்கிறது என் மனம்

மீண்டும் மீண்டும் போட்டியிட்டுத் தோற்கிறது
ஆமாம்..
மீண்டும் மீண்டும் போட்டியிட்டுத் தோற்கிறது
உறக்கம் பறித்து
உனைத் தேடி அழும் இரவுகளையும்
இருளை விதைத்து
இவன்வழி பறித்த பகல்களையும் தந்த
இரக்கமற்ற உன் நினைவுகளை மறப்பதற்கு
நாள்தோறும் நான் வைக்கும் போட்டியில்
மீண்டும் மீண்டும்
போட்டியிட்டுத் தோற்கிறது "என் மனம்"

எழுதியவர் : மணி அமரன் (12-Nov-15, 1:41 pm)
பார்வை : 638

மேலே