அத்தைமகள்

சித்திரை நிலவு சிரிக்கும் சிரிப்பினில்
பத்தரைமாத் துத்தங்கம் அவள்என் பார்வையில்
அத்தைமகள் தாவணியில் வருகையில்
பித்தனாகி நிற்பேன்நான் வாய்க்கால் கரையினிலே !

----கவின் சாரலன்
முதல் பதிவு :
சித்திரை நிலவு அவள் சிரிக்கும் சிரிப்பினில்
பத்தரை மாத்து தங்கம் அவள் என் பார்வையில்
அத்தையின் மகள் தாவணியில் துள்ளி வருகையில்
பித்தனாகி நிற்பேன் நான் வாய்க்கால் கரையினில்.

கவிப் பிரிய இராசேந்திரன் கவனிக்க :
முதல் பதிவிலுள்ள சொற்களை சீராக அமைத்து நான்கு அடிகளாக
அமைத்திருக்கிறேன் . எல்லா அடிகளும் நான்கு சீர்களும் கடைசி அடிக்கு
முந்தய அடியில் மூன்று சீர்கள் . கடைசிசீர் கரையினிலே ஏகார விகுதி
கொண்டு முடிகிறது
இது நேரிசை ஆசிரியப்பா
ஒரு நல்ல புரியக் கூடிய யாப்பிலக்கணப் புத்தகத்தை வாங்கி பயிலவும்
கவி வளம் கற்பனை வளம் கவி ஆர்வம் செழுமையாக இருக்கிறது
உங்களிடம் . யாப்பு வசமாகும் .
நூலுக்கும் நூலாடைக்கும் பேர் போனது கோவை. உங்களால் பசுமைக்கும் .
அடுத்து வெண்பாவில் முயல்கிறேன்

எழுதியவர் : கவின் சாரலன் (13-Nov-15, 10:21 am)
பார்வை : 91

மேலே