மனிதன் விலை ரூ 1

மனிதன் விலை ரூ 1

இறைதந்த மனுப்பிறவியில்
குறையேதும் இல்லையயையா !
கள்ளமில்லா எண்ணமொன்றே
கனவுகளும் நினைவாக்கும் !
விதியோடு விளையாட்டில்
வினையறுக்கார் யாருமில்லை !
ஆசையென்ற கடலினிலே
ஆழ்ந்தமனம் மீண்டதில்லை !
குறையில்லார் எவருமில்லை
குறையுணர்வார் நிறையாவார் !
பணமென்னும் பிணத்திற்கு
மனமிழப்போர் மனிதனில்லை !
செய்நன்றி கொன்றார்க்கு
மெய்வழியில் இடமில்லை !
பிறப்புக்குள் ஒளிந்திருக்கும்
இறப்பென்று அறிதல் நன்று !
அறமிழந்த திறம் செய்வார்
நிறமிழந்த மனிதனாவார் !
ஆண்ட புகழ் ஆயிரமாயினும்
மாண்டவுடன் மீதி ரூபாய் 1 !
நன்றிகொள்வோம் மானிடராய்
நல்வழியே மார்கமென்று !

பிரியமுடன்
அசுபா

எழுதியவர் : அசுபா (15-Nov-15, 1:54 am)
பார்வை : 115

மேலே