விஞ்ஞானம்

விஞ்ஞானமாம் விஞ்ஞானமாம் விஞ்ஞானமாம் விஞ்ஞானம்
வித விதமாய் விசித்திரங்கள் உலகில் காட்டும் விஞ்ஞானம்
அஞ்ஞானமாய் விஞ்ஞானத்தை பொய்ஞானம் என்று கூறுவர்
விஞ்ஞானத்தை அஞ்ஞானமாய் உணர்ந்து கொண்ட மூடரே

காந்தபுலம் கண்டறிந்த மனிதன் இங்கே விஞ்ஞானி
காணும் இந்த அண்டவெளி காந்தபுலத்தின் முன்னோடி
அண்டவெளியில் புதைந்திருக்கும் ஆயிரம் ஆயிரம் ரகசியம்
அந்த ரகசியத்தை கண்டுணர்த்தும் அறிவியலே விண் ஞானம்

இயற்கையான கோள்களை படைத்தவனிங்கு இறைவனென்றால்
செயற்கையான கோள்களை படைத்த மனிதனும் இறைவனோ
செயற்கை கோளின் விஞ்ஞானத்தால் உலகம் விரல் நுனிகளில்
செயலிழந்து போவோம் நாம் அது செயலிழக்கும் நேரத்தில்

கனி ஒன்று விருட்சம் விட்டு பூமி நோக்கி விழுந்தது
ஏன் என்ற கேள்வி ஒருவன் சிந்தையிலே உதித்தது
தான் வகுத்த முதல் விதிக்கு வித்தாக அது ஆனது

அப்பன் சேர்த்த சொத்துக்காக சண்டை போடும் பிள்ளைகள்
தப்பாமலே ஆயினரே கரையானுக்கு தீனிகள்
ஒற்றுமையாய் ஒரு எண்ணம் இரு மூளைகளில் உதயமாகி
விர்ரெனவெ விண்ணில் பறக்கும் விமானத்தையும் உருவாக்கி
சரித்திரத்தில் இடம் பிடித்த சரித்தர சகோதரர்கள்

அறிவு ஒளி தேடித்தான் பள்ளி சென்ற மாணவன் - மீது
பரிவு ஏதுமின்றி வாழ்வை இருளடிப்பு செய்யும் வண்ணம்
விசரன் பட்டம் கட்டியே வீடு துரத்தியது பள்ளியும்
எரியும் அவன் அறிவு வேட்கை நித்தம் நெஞ்சில் எரிந்ததால்
எரியும் மின் விளக்கினை கொண்டு உலகிற்கு ஒளி தந்தார்

உலகத்தை உளவு பார்க்கும் செயற்கைகோளின் கண்களிலே
உயர்வான நம் கலாம் அய்யா உப்பு மிளகாய் தூவித்தான்
உரக்கவே உலகிற்கு உரைத்திடவே சொன்னாரே
உண்மையிலே என்நாடும் அணுகுண்டு நாடென்று

அரங்கத்தில் அம்சமாக அமர்ந்துகொண்டு பார்க்கத்தான்
அயல்நாட்டவர் விஞ்ஞான படம் ஒன்றை எடுத்தனர்
நன்றான அப்படத்தின் செலவில் பாதி தொகையிலே
நம்மவர் நிலவிற்கு சந்திராயன் அனுப்பினர்

விஞ்ஞான வளர்ச்சி கண்டு பெருமை கொள்ளும் வேளையில்
விபரீத விளைவுகளும் விழுங்க வாயைத்திறக்குதே
இயற்க்கைக்கு புறம்பான விஞ்ஞான கண்டுபிடிப்புகள்
அவை நம்மை விழுங்க காத்திருக்கும் யானைகொன்றான் அரவுகள்

எழுதியவர் : கோபிநாதன் பச்சையப்பன் (14-Nov-15, 11:21 pm)
Tanglish : vignaanam
பார்வை : 631

மேலே