மீண்டும் மீண்டும்
கந்து வட்டி இல்லா ஊர்
மதுக்கடை இல்லா மாநகரம்
விலை நிலமாகாத வயல்கள்
மேடு பள்ளமில்லாச் சாலைகள்
ஊழல் இல்லா அரசியல்
லஞ்சம் வாங்காத ஊழியர்
தண்ணீர் பஞ்சம் இல்லா தமிழகம்
விபத்தில்லா சாலைகள்
பசுமை பொங்கும் காடுகள்
சலவை நோட்டைப் பார்க்காத மருத்துவர்
சாதிச்சான்றிதழ் கேட்காத பள்ளி
மத பேதம் பேசாத மனிதம்
கலப்படம் இல்லா பொருட்கள்
ஆதரவற்றோர் இல்லா இல்லங்கள்
தீக்குச்சி அடுக்காத அரும்புகள்
மீண்டும் மீண்டும் வேண்டும் இங்கு