சோர்வை அகற்றும் பிரார்த்தனை – காந்தியின் பொன்மொழிகள்

சோர்வை அகற்றும் பிரார்த்தனை

* என் உயிரையே காப்பாற்றி வந்திருப்பது பிரார்த்தனைதான். பிரார்த்தனையின்றேல்,

நீண்டகாலத்திற்கு முன்பே எனக்குப் பைத்தியம் பிடித்திருக்க வேண்டுமென பொது வாழ்க்கையிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் மிகக் கசப்பான அனுபவங்கள் எனக்கு ஏற்பட்டன என்பதை என் சுயசரிதையிலிருந்து நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

அவை எனக்குத் தற்காலிகமாக மனச் சோர்வை உண்டாக்கின. எனினும் நான் அந்தச் சோர்வை அகற்றும் ஆற்றல் பெற்றிருந்தேனெனில் அதற்குக் காரணம் பிரார்த்தனை தான்.

* சத்தியம், எனது வாழ்க்கையின் ஓர் அம்சமாகவே இருந்து
வந்திருக்கிறது. ஆனால், பிரார்த்தனை அவ்விதம் இல்லை.
அவசியம் காரணமாகவே என் வாழ்க்கையில் பிரார்த்தனைக்கு இடம் ஏற்பட்டது.

பிரார்த்தனை இன்றேல், நான் மன நிறைவுடன் இருக்க
முடியாது என்ற நிலை ஏற்பட்டதே அதற்குக் காரணமாகும்.

* நான் பிரார்த்தனையிலும் நம்பிக்கையின்றியே
வாழ்க்கையைத் தொடங்கினேன்.
இளம்பருவத்தில் இதனால் சூன்ய நிலை எதுவும் தோன்றவில்லை. ஆனால், வாழ்க்கையின் பிற்பகுதியில்
உடலுக்குணவு எவ்வளவு அவசியமோ அவ்வளவு
ஆன்மாவுக்குப் பிரார்த்தனை அவசியம் என்பதை உணர்ந்தேன்.

* உண்மையில் பிரார்த்தனை ஆன்மாவுக்கு எவ்வளவு
இன்றியமையாததோ அந்தளவுக்கு உடலுக்கு உணவு அவசியமில்லை.

ஏனெனில் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு அடிக்கடி பட்டினி கிடக்க வேண்டியது அவசியமாகிறது. ஆனால்,
‘பிரார்த்தனை பட்டினி’ என்ற எதுவும் இல்லை.

உணவு மிதமிஞ்சிப் போவதைப் போல, பிரார்த்தனையில் மிதமிஞ்சுவது என்பதற்கே இடமில்லை.

எழுதியவர் : படித்ததில் பிடித்தது - செந (15-Nov-15, 9:00 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 126

சிறந்த கட்டுரைகள்

மேலே