ஒரே நிமிடத்தில் புண்ணியம் – கிருபானந்த வாரியார் பொன்மொழிகள்

ஒரே நிமிடத்தில் புண்ணியம்

* தன்னுடைய புத்தகம், பெண், பணம் இவை பிறரிடம் கொடுத்தால் போனது போனதுதான். ஒருவேளை திரும்பி வருவதாயின் புத்தகம் கிழிந்தும், பெண் மாசுபடிந்தும், பணம் அளவு குறைந்தும்தான் வரும்.

* முதலை வாய்ப்பட்ட மணியை எடுத்து விடலாம். அலைபாயும் கடலையும் அப்புறமாகத் தாண்டிடலாம். பாம்பையும் மாலையாக கழுத்தில் அணிந்திடலாம். ஆனால் மூடனைத் திருத்த யாராலும் இயலாது.

* ஆறு தரம் பூமியை வலம் வருதலும், பதினாராயிரம் தடவை காசியில் குளித்தலும், பலநூறு தடவை சேது ஸ்நானம் செய்தாலும் ஆகிய இவற்றால் கிடைக்கும் புண்ணியம், தாயைப்பக்தி பூர்வமாக ஒரு தரம் வணங்கினால் கிடைக்கும்.

* விளக்கு நமக்கு எத்தனை வண்ணமாக உதவி செய்கிறது என்பதை நாம் அது இல்லாதபோதுதான் உணர முடியும். தாய் நம்மை எப்படியெல்லாம் வளர்க்கின்றாள் என்பதை தாய் இல்லாத போதுதானே உணர முடிகிறது.

* பறவைகட்கு இரு சிறகுகள்; மனிதனுக்கு இரு கால்கள், இரு கைகள், இரு கண்கள். புகை வண்டிக்கு தண்டவாளங்கள் இருப்பதுபோல் மாணவர்களுக்கு இரு குணங்கள் இருக்க வேண்டும்.

ஒன்று அடக்கம், மற்றொன்று குருபக்தி. இந்த இரு குணங்கள் உள்ள மாணவன்தான் முன்னேற்றமடைவான்.

* இன்பமான சொல்லும், சிரித்த முகமும், பார்வையும், நண்பர்களின் சொல்லைக் கேட்க வேண்டுமென்ற எண்ணமும், அவர்களைக் கண்டவுடன் சந்தோஷப்படுதலும் ஆசையில்லாதவனின் லட்சணங்களாகும்.

* தீப்பந்தத்தைக் கீழ்நோக்கிப் பிடித்தாலும் அதன் ஜுவாலை மேல்நோக்கி எழுவதுபோல் உயர்ந்த குணத்தை கீழ்ப்படுத்த சொப்பனத்திலும் முடியாது.

எழுதியவர் : படித்ததில் பிடித்தது - செந (15-Nov-15, 9:39 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 158

மேலே