வின் ஞானம்

அக்கினி குழம்பு அழகாய் தோன்ற அதில் சிதறிய குழம்பு உருவாய் மாற மாறிய உருவோ மலையாய்,மணலாய் ஆக
சுற்றிவரும் பாதையில் சுழல்பல தோன்றியதாம்.

சுற்றுச்சூழலும் சூழலும்வகையும் சூத்திரம் கொண்டு
வளி,ஒளி,காந்தமண்டலம் கண்டோரே..
விண்ணியல் தெரிந்தால் விண்-ஞானம்
விண்ணியல் தெரியவைத்தது விஞ்ஞானம்

சூரிய சக்தியாய் இறை இருக்க-அதிலிருந்து
சிதறிய சக்தியாய் நாமிருக்க-சூரியகுணமனைத்தும்
சூரியகுடும்பத்தில் இருப்பதுபோல்-இறைகுணமனைத்தும்
நம்மிடத்தில் இருப்பதால் நாமும் இறையானோம்

இதுவே வின்(win)ஞானம், என் ஞானம்....

எழுதியவர் : (15-Nov-15, 11:33 pm)
Tanglish : vin nanam
பார்வை : 80

மேலே