மீண்டும் மீண்டும்
மீண்டும் மீண்டும்
ஒரு மாலை வேலை
தூறும் மழை
வானம் மேலாய்
தினமும் புதியதாய்
நூறு மேகங்கள்
மாற்று பாதைகள்
செல்லும் வாழ்க்கைகள்
கூறும் கதைகள்
கேட்கும் செவிகள்
காரணம் கனவுகள்
மலரும் நினைவுகள்
பலரும் நினைவார்கள்
குடையும் நாட்களும்
நினையாமல் காத்துக்கொள்ளும்
நிறையும் பற்களும்
நினைந்ததை காட்டும்
மீளும் நாளும்
சாரலும் தெறிக்கும்
கடக்கும் கணக்கும்
தொடக்கம் கிடைக்கும்
காரணம் கண்டுபிடிக்கும்
உல்லாசம் பெருகும்
மண்வாசம் நிலைக்கும்
கரமும் கைகோக்கும்
புதிதும் கைசேரும்
வானம் புதியதாகும்
மீண்டும் மீண்டும்
காரணம் காலாவதியாகும்
பார்வை மாறும்
வானம் வேண்டும்
மீண்டும் மீண்டும்
நாளும் நாள்தோறும்
மனிதனாக வாழ
-மனக்கவிஞன்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
