விஞ்ஞானம்

மண்ணை விட்டு
விண்ணில் புகலிடம்
தேடும் ஞானம்...

பழைய மறைகளை
புதிய முறையில்
எடுத்துரைக்கும்
அறிவியல்...

ஒரு இடம் கொண்டு
அதில் ஒளி கொண்டு
பல ஞானம் கொண்டு
வழி நெறி அறிந்து
திறனாலும் அதன்
உழைப்பாலும்
வெளிப்பட்டன இன்றைய
விஞ்ஞான சூட்சமங்கள்...

திரும்பிப் பார்த்தால்
இவற்றால் நாம்
அடைந்ததைவிட
அதனால் ஏற்ப்பட்ட
விளைவுகள் தெரியும்...

தொலைநோக்கு
பார்வையில்
உருவனதெல்லாம்
இயற்கையோடு
தொடர்பில்லாமல்
விலகுகிறது...

விண்ணில்
கொடி நாட்டிய
விஞ்ஞானம் தம்
மண்ணை
மறந்தது ஏனோ...

ஆக்கத்திற்கு மார்தட்டும்
விஞ்ஞானம்
அழிவிற்கு சொல்லும்
பதில் ஏதோ...

எழுதியவர் : ஜீவனன் (17-Nov-15, 6:35 pm)
சேர்த்தது : கார்த்தி கேயன்
Tanglish : vignaanam
பார்வை : 52

மேலே