கார்த்தி கேயன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : கார்த்தி கேயன் |
இடம் | : திருச்செங்கோடு |
பிறந்த தேதி | : 30-Jul-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 12-Feb-2014 |
பார்த்தவர்கள் | : 70 |
புள்ளி | : 15 |
காதல் கூண்டில் அடைந்து
பிரிந்த பின்பு
அதன் நினைவில் கிடந்து
தொலைத்த வாழ்க்கையை
தேடும் ஜீவனன்
உடைய அவன்
ஜீவனன்
உன்னால்
உயிர் பெற்றேன்
அன்பை
உணர்ந்தேன்
வாழ்வைத்
தொடங்கினேன்
உன்னையும்
நேசித்தேன்
இவ்வுலகில்
நான்
உள்ளவரை....!
மண்ணை விட்டு
விண்ணில் புகலிடம்
தேடும் ஞானம்...
பழைய மறைகளை
புதிய முறையில்
எடுத்துரைக்கும்
அறிவியல்...
ஒரு இடம் கொண்டு
அதில் ஒளி கொண்டு
பல ஞானம் கொண்டு
வழி நெறி அறிந்து
திறனாலும் அதன்
உழைப்பாலும்
வெளிப்பட்டன இன்றைய
விஞ்ஞான சூட்சமங்கள்...
திரும்பிப் பார்த்தால்
இவற்றால் நாம்
அடைந்ததைவிட
அதனால் ஏற்ப்பட்ட
விளைவுகள் தெரியும்...
தொலைநோக்கு
பார்வையில்
உருவனதெல்லாம்
இயற்கையோடு
தொடர்பில்லாமல்
விலகுகிறது...
விண்ணில்
கொடி நாட்டிய
விஞ்ஞானம் தம்
மண்ணை
மறந்தது ஏனோ...
ஆக்கத்திற்கு மார்தட்டும்
விஞ்ஞானம்
அழிவிற்கு சொல்லும்
பதில் ஏதோ..
அழகிய வனத்தில்
தோகை இழந்த மயிலே
உன்னைப்போல்
செயலாற்றுவார்
யார் இங்கே.?
உன் இடத்தில்
நீ இல்லாமல்
யார் இங்கே.?
இளைஞர்களே
கனவு காணுங்கள்
என்றாய்
ஒருநாள் மெய்ப்படும்
என்றாய்
புதிய வாழ்விற்கு
அடித்தளமிட்டாய்
அதன் பலமே நீதானே..
நீ இல்லாத உலகில்
நாங்கள் என்ன
செய்வோம் இங்கே...
புதிய கற்பனைகளின்
உருவகம் நீ
விந்தை அறிவியல்
பணிந்தது உன்னிடம்
விண்ணில் ஏற்றினாய்
மண்ணில் சிதறடித்தாய்
திசையெங்கும்
திரும்பிட செய்தாய்
அன்பும் பணிவும்
எளிமையும் உண்மையும்
தீராத சிந்தனையம் கொண்டே
விருதுகள் பல
தட்டிச் சென்றாய்..
வழிகாட்ட தொடர்ந்தாய்
வழிகாட்டியாக மலர்ந்தாய்
கனவுகளின் நாயக
மாற்றம் தந்து மாற செய்தாளே
துணையாய் வந்து தங்கி சென்றாளே
நானாக நானிருந்தேன் அவளை நான் காணும் வரை
உனக்காக உடனிருந்தேன் நீ என்னை காணும் வரை ...
நிழலாக பின்தொடர்ந்தேன் கனலாக மாறி இருந்தேன்
பேசநினைத்த வார்த்தையெல்லாம் ஊமையாகி போய் இருந்தேன்
சொல்லிக்கொடுத்த இதயமே காட்டிக் கொடுத்ததடி
நீ கண்களால் கைது செய்ய அடங்கினேன் நானடி...
நினைவாக வாழ்ந்த வாழ்க்கை எல்லாம்
நிஜமாக மனம் நினைக்குதடி
மறைந்து போன நாட்களெல்லாம்
மீண்டும் மலர எண்ணுதடி...
மனம்விட்டு பேச சில பொழுது வேண்டும்
உன்னருகில் இருக்க ஒரு நொடியும் போதும்
மாலை நேர சாரல் காற்றில் நடந்து வந்தோம்
இலை ஒட்டிய பனித்துளி போல ப
ஏன்
இந்த பயணம்
தெரிந்த முகங்கள்
தெரியா குணங்கள்
இன்னாள் தோழர்கள்
முன்னாள் தோழிகள்
பேசிய நிமிடங்கள்
மறந்த நாட்கள்
தேடிச் சென்ற
உணர்வுகள்
நாடி வந்த
உறவுகள்
அதனால்
முன் இன்பம்
பின் இன்னல்
சொல்லித் தெரிந்தது
சொல்லாமல் பிரிந்தது
அன்று முதல்
இன்று வரை
நான் நினைக்காமல்
இருக்க மாட்டேன்
நீ என்னுள்
இருக்கும் வரை