நினைவு

ஏன்
இந்த பயணம்
தெரிந்த முகங்கள்
தெரியா குணங்கள்
இன்னாள் தோழர்கள்
முன்னாள் தோழிகள்
பேசிய நிமிடங்கள்
மறந்த நாட்கள்
தேடிச் சென்ற
உணர்வுகள்
நாடி வந்த
உறவுகள்
அதனால்
முன் இன்பம்
பின் இன்னல்
சொல்லித் தெரிந்தது
சொல்லாமல் பிரிந்தது
அன்று முதல்
இன்று வரை
நான் நினைக்காமல்
இருக்க மாட்டேன்
நீ என்னுள்
இருக்கும் வரை