மாற்றம்
மாற்றம் தந்து மாற செய்தாளே
துணையாய் வந்து தங்கி சென்றாளே
நானாக நானிருந்தேன் அவளை நான் காணும் வரை
உனக்காக உடனிருந்தேன் நீ என்னை காணும் வரை ...
நிழலாக பின்தொடர்ந்தேன் கனலாக மாறி இருந்தேன்
பேசநினைத்த வார்த்தையெல்லாம் ஊமையாகி போய் இருந்தேன்
சொல்லிக்கொடுத்த இதயமே காட்டிக் கொடுத்ததடி
நீ கண்களால் கைது செய்ய அடங்கினேன் நானடி...
நினைவாக வாழ்ந்த வாழ்க்கை எல்லாம்
நிஜமாக மனம் நினைக்குதடி
மறைந்து போன நாட்களெல்லாம்
மீண்டும் மலர எண்ணுதடி...
மனம்விட்டு பேச சில பொழுது வேண்டும்
உன்னருகில் இருக்க ஒரு நொடியும் போதும்
மாலை நேர சாரல் காற்றில் நடந்து வந்தோம்
இலை ஒட்டிய பனித்துளி போல பிரிந்து சென்றோம்..!