நிறமின்றி ஒழுகும் இரவு
![](https://eluthu.com/images/loading.gif)
மகரந்த பொதிகளில்
உலகவுயிர்த்துளியை
நிறைத்த வேகத்தில்!
உயிரிகளின் உறக்கதில்
கனவு நிறுவன
கதவுதிறந்த களைப்பில்!
யவ்வனத்தில் ஒழுகிய
முனகல்களில்
முங்கிய மூச்சிறைப்பில்!
தூங்காத செவிகளில்
கடிகார முள்நகர்வையும்
ஒப்பித்த களிப்பில்!
குடிசை கூரையை
பெயர்த்தடுக்க_காற்றை
பெற்றெடுத்த வலியில்!
எவரெவெரோ பிரிவில்
சுரப்பிலிருந்த கண்ணீர்
சுவைத்த நிறைவில்!
இரவுக்கு
வியர்த்திருக்கிறது!
வியர்வை பனித்துளி
இரவு
அழுதுமிருக்கிறது!
அழுகை பனித்துளி
கோவிலுண்டியலை
அநாதையில்லத்திற்கு
திருடியவனுக்காக
மாத்திரமே
இரவு அழுதிருக்கிறது
அழுகை பனித்துளி