இந்த அளவிற்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட மிக முக்கியமான காரணம்

இந்த அளவிற்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட மிகமுக்கியமான காரணம் "கிராம நிர்வாக அலுவலர்கள்" தான். இவர்கள்தான் சுயநலத்திற்காக ஆக்கிரமிப்புகளை அனுமதித்து வெள்ளம் ஏற்பட காரணமான முதல் குற்றவாளிகள்.

முன்சீப், கர்ணம், மணியக்கார், தலையாரி முறை இருந்தவரை நீர்பிடிப்பு, நீர்வழி, ஆக்ரமிப்புகள் நடைபெறாமல் தடுக்கப்பட்டன. தர்ம சிந்தனையுடனும் நேர்மையாகவும் கிராம நலன், விவசாய நலன் கருதி செயல் பட்டார்கள் மேலும் "அந்த ஊர்காரர்கள் மட்டுமே இந்தப்பதவியில் இருந்தார்கள்"

முன்சீப் முறைகேட்டில் ஈடுபட்டால் உடனே கலெக்டர் பதவியை பிடிங்கி வேறு ஒருவருக்கும் கொடுத்துவிடுவார் - அப்படி ஏற்பட்டால் அது தனக்கு அவமானம் எனகருதி அவர்கள் கௌரவப்பணியாக செய்தார்கள்)

(எனது சிறுவயதில் நான் கண்டது: தாம்பரம் முன்சீப் தேவா. கிருஷ்ணசாமி ரெட்டியார, ஸ்ரீராமுலு ரெட்டியார் அவர்கள் கடும் மழைக்காலங்களில் நள்ளிரவில் குடைபிடித்துக்கொண்டு தலையாரி, கம்பட்டிக்காரனுடன் சேர்ந்து லாந்தர் விளக்கு எடுத்துக்கொண்டு சுற்றியுள்ள ஏரிகளை நடந்து சென்று கண்காணிப்பாரகள். மேலும் குடிசைவீடுகளை நேரில் வந்து பார்த்து தேவையான உதவிகளை தன்சொந்த செலவில் செய்வார்கள்)

இன்று ஏரியை உடையுங்கள் ....நான்கண்டுக்கொள்ளமாட்டேன் என்றுதான் கி.நி.அ செயல்படுகிறார்கள். இவர்களுக்கு வேலை செய்யும் கிராமத்தின் நிலம் குறித்த வரைபட அறிவு துளிகூட இருக்காது இன்றும் பழைய முன்சீப், தலையாரி இல்லாமல் இவர்களுக்கு நிலம் எங்கு உள்ளது ? யாருடையது? அது நஞ்சையா, புஞ்சையா என்று அறிந்துக்கொள்ள முடியாத நிலை. பல நிலமோசடிகளுக்கு முதல் காரணமே இந்த கி.நி.அ தான்....! தமிழகம் முழுவதும் சுமார் 1000க்கும் மேல் குற்றவழக்குகள் கி.நி.அ மேல் நிலுவையில் உள்ளது எல்லாமே ஆக்கிரமிப்பு சார்ந்தவை....! இப்படி கிரிமினல்கள் கி.நி.அ தோற்றத்தில் வெள்ளம் ஏற்பட காரணமாக உள்ளார்கள்

இப்பொழுது ஒரு கி.நி.அ காண்பதற்கு பலநாட்கள் தவம் இருக்கும் நிலை...!

1000 ரூபாய் லஞ்சத்திற்காக கிராம நிர்வாக அலுவலர்கள் செய்யும் முறைகேடுகள் கொஞ்சநஞ்சமல்ல இவர்கள் தான் இந்த வெள்ளப்பெருக்கிற்கு மிகமுக்கியமானவர்கள் இவர்கள் தந்த அனுமதிதான் ஆக்கிரமிப்புகள் பெருக ஆரம்பித்து இன்று சென்னையை கடலாகமாற்றிவிட்டது

கி.நி.அ அனுமதியில்லாமல் ஒரு அடிநிலம் கூட ஆக்கிரமிப்பு செய்ய இயலாது. அடிப்படையில் இவர்கள்தான் நிலநிர்வாகத்தின் ஆணிவேர்கள். இன்றும் இவர்களே அதிக அதிகாரம் படைத்தவர்கள் இவர்கள் எழுதும் சிறுகுறிப்பு கூட அதிகமுக்கியம் வாய்ந்த ஆவணமாகும். அந்தளவிற்கு கிராமத்தை காக்கும் அதிகாரம் கி.நி.அ தரப்பட்டுள்ளது.

இன்று கிராம நிர்வாக பணிகள் லஞ்சம் எனும் ஆசிட் ஊற்றி சிதைந்துவிட்டது. சில ஊர்களுக்கு கி.நி.அ மாற்றம் பெற பலலட்சம் லஞ்சம் தரும் கி.நி.அதிகாரிகளால் தான் இந்த வெள்ளநிலை

கி.நி.அ. தங்களின் வாரிசுகளும் நாளை இந்த வெள்ளத்தில்தான் நீச்சலடிக்கவேண்டும் என்பதை மறந்து நீர்நிலைகளை காக்க தவறவிட்டார்கள்.

சென்னையில் மட்டும் 115 ஏரிகள் கி.நி.அ முறைக்கு பின்னர் ஆக்கிரமிப்பால் காணாமல் போய்விட்டது..!

"ஏரிக்கரை தெரு" உண்டு ஏரி இல்லை....!

தாம்பரத்தில் மட்டும் 6 ஏரிகள் இன்று இல்லை. 9 இந்து சுடுகாடுகள்
ஆக்கிரமிக்கப்பட்டு வணிகவளாகங்களாக உள்ளன

நேர்மையான அதிகாரிகள் இனிமேல் பிறந்துவந்து சரிசெய்யும் முன்னர் காலம் கடந்துவிடும்

நேர்மையான நிலநிர்வாக துறை அதிகாரிகள் ஒருசிலரே இன்று இருக்கிறார்கள் அவர்களும் "அதிகாரம் படைத்த லஞ்சப்பேய்களால்" ஊர்ஊராக இடமாற்றம் செய்யப்பட்டு அலைகழிக்கப்படுகிறார்கள்.

நேர்மையே உன்விலை என்ன?

குறிப்பு: முன்சீப், கர்ணம், மணியக்கார், தலையாரி, கம்பட்டிக்காரன் எல்லாம் பரம்பரையாக உள்ளார்கள் இவர்களை ஒழித்து தேர்வு நடத்தி கி.நி.அ பணியில் அமர்த்திய அரசியல்வாதிகளே உங்கள் வாரிசுகள் "மட்டுமே" இந்தநாட்டை பரம்பரையாக ஆளப்பிறந்தவர்களா?

எழுதியவர் : செல்வமணி - மீள் பதிவு (19-Nov-15, 8:48 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 246

மேலே