அரிய வகை தாழி பனைமரம்
அரிய வகை "தாழி' பனைமரம்.
ஆயுள் 65-70 ஆண்டுகள்.
ஆயுளின் முடிவில் ஒரே ஒரு முறை பூத்து காய்த்து மடிந்து விடும்.
பழங்காலத்தில் எழுதுவதற்கு தேவையான ஓலைச் சுவடிகள் தாழிப்பனை மரங்களில் இருந்து பெறப்பட்டன. இம்மரத்தின் ஓலைகளை பக்குவப்படுத்தி சுவடிகள் எழுதப்பட்டன.
சாதாரண பனை மரத்தைப் போல் இல்லாமல் இந்த மரத்தின் மட்டை நீளமாக இருக்கும்.
சங்க காலத்தில் தென்னிந்தியாவில் தாழிப்பனை மரம் பரவலாக காணப்பட்டது. இப்பொழுது அருகி வருகிறது.
பல ஊர்களில் கூந்தற்பனை என தவறாக அழைக்கப்படுகிறது.
இந்த படம் NH45ல் 90கிமி தொலைவில் இடப்புறம் இருக்கும் ஒரு கோவிலில் 14-11-2015 அன்று எடுக்கப்பட்ட படங்கள்.