ஆண்களே, உஷாரா இருங்க

வள்ளுவர் இப்போ இருந்தா முதல்ல உன் மனையை நோக்கிட்டு அப்புறமா பிறன் மனை நோக்கி தொலைங்கடான்னு எழுதியிருப்பாரோ என்னவோ.. சமீபமா கடமை தவறும் ஆண்களை நிறைய சந்திக்கிறேன்.

ஒரு மருத்துவ உண்மை என்னன்னா 'குறை எடையோட பிறக்கும் குழந்தை பெண்ணாக இருந்தால் பிழைக்கும் வாய்ப்பு 75% அதுவே ஆணாக இருந்தால் 25% மட்டுமே' பெண்மை எல்லா விசயத்திலும் ஆணை விட வலுவானது..

எந்த விதத்தில் பார்த்தாலும் பெண்ணுக்கு ஆண் ஈடாக முடியாது, அவளுக்குள் சுரக்கும் அன்பு, நேசம், காதல், செக்ஸ், தாய்மைன்னு எதுக்கும் ஆணால் கிட்ட நிற்க முடியாது. உடல் வலிமையில் மட்டுமே பெண்ணை மிஞ்சுகிறான். ஆனால், அதுவும் பெண்ணை கர்ப்ப காலத்தில் காப்பதற்காகவே இயற்கை அளித்திருக்கிறது.

திருமணம்ன்னு ஒன்னு பண்ணி அவளை கைக்குள்ள வச்சுகிட்டு ஆண்கள் போடும் அலப்பறைக்கு அளவே இல்லை. சம்பாதிக்கிறோம்ன்னு ஒன்னை சொல்லிகிட்டே மொத்த காலத்தை ஓட்டுறோம்.

காலையில் இருந்து இரவு வரை பெண்கள் செய்யும் வேலைக்கு நாம ஆபீஸ்'ல செய்ற வேலை ஈடாகுமா? ஒரு நாள் குழந்தைங்களோட இருந்து பார்த்தா தான் தெரியும்.

காற்று, தென்றலா வீசுனா அதை பெரிசா உணர மாட்டோம். காற்றே இல்லாத ஒரு நிலை வந்தால் தான் காற்றின் அருமை தெரியும். அதே மாதிரி, வீட்டு வேலைகள் எல்லாம் செஞ்சு வச்சுட்டு, நமக்கு எந்த சிரமும் இல்லாம விட்டுடறதால தான் கொழுப்பு எடுத்து அலையறோம்ன்னு தோணுது...

நம்ம கூட வாழனும் (எப்பா எவ்ளோ பெரிய தண்டனை) நம்ம குழந்தையை சுமக்கனும், அப்புறம் வளக்கனும். (ஒத்தை வார்த்தைல சொல்ற மேட்டராயா இது), வீட்டை பாக்கனும், துவைக்கனும் (வாஷிங் மெஷின் இருக்குன்னு சொன்னா வாயிலயே குத்துவேன்), சமைக்கனும், ட்யூசன், ஆய் கழுவுதல், உடம்புக்கு முடியலைன்னா பாக்குறதுன்னு சொல்ல முடியாத மேட்டர் எல்லாம் வாழ் நாளுக்கும் பண்ணனும்.

எவ்வளவோ செய்றாங்க பதிலுக்கு எதிர்பார்க்கிறது என்னது? ஒரு காதல் மொழி, ஒரு தலை வருடல், கன்னம் தடவுதல், தலை முடி கோருதல், சொடக்கு போடுதல். இப்படி சப்பை மேட்டர் தானே... செஞ்சு தொலைப்போமே...

பேசாமலே இருப்பது, குழந்தைகள் முன்னாடி சண்டை போடுறதெல்லாம் கொடும் வன்முறை. ஒரு முறை குடும்ப சகிதமா சினிமாக்கோ, கழுதை, கோயிலுக்கோ போய்ட்டு வாங்க, சிரிச்சா மாதிரி முகத்தை வச்சுட்டு பேசுங்க...(ரொம்ப கஷ்டம் தான் பட் ட்ரை பண்ணுங்க)

கல்யாண புதுசுல எல்லாம் செய்றது தானே, 10 வருஷம் போச்சுன்னா (3650 நாள்) ஏன் செய்ய மாட்றோம்? குட்டி குட்டியா திட்டம் போட்டு மினி பட்ஜெட்ல மினி டூர் போலாம்ல..

அட செக்ஸ் கூட ஒரே அறைல 10 வருஷமா வச்சுகிட்டா போர் அடிக்க தான்யா செய்யும்.. வெளியே எங்கயாவது போய் ட்ரை பண்ணுங்க பாஸு...

இப்படியே தென்றலாவே வீசிட்டு இருக்கும்ன்னு நினைக்காதீங்க... புயலா மாறி ஒரு காட்டு காட்டுச்சுன்னா தான் தெரியும். அட புயலா வேணாம்யா... தென்றலாவே பக்கத்துக்கு வீட்டுக்கும் வீசிட போகுது... உஷாரா இருங்க...

கழுதை, போனா போகுது.. ஆண்கள் தின வாழ்த்துக்கள்...

எழுதியவர் : செல்வமணி - மீள் பதிவு (19-Nov-15, 8:41 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 309

மேலே